மலேசியாவிற்கு ஸ்னூக்கர் போட்டியில் மேலும் ஒரு தங்கம்

One more gold in snooker event for Malaysia

மலேசியாவிற்கு  ஸ்னூக்கர் போட்டியில் மேலும் ஒரு தங்கம்

புனோம் பென், மே 15: 2023ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் ஸ்னூக்கர் போட்டியில் தோர் சுவான் லியோங் பங்களித்த பில்லியர்ட்ஸ் மூலம் மலேசியா மீண்டும் தங்கப் பதக்கத்தை வென்றது.

ஏயோன் மால் சென் சோக்கில் நடந்த இறுதிக் கட்டத்தில் தாய்லாந்தின் அகானி சாங்செர்ம்சாவாத்தை வீழ்த்தி, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுவான் லியோங் தங்கம் வென்றார்.  இறுதியாக அவர் சிங்கப்பூரில் 2015 பதிப்பில் வென்றது குறிப்பிடத்தக்கது.

அவர் 4-1 (74-42, 67-48, 53-72, 53-17, 63-21) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு தேசிய தடகள வீரர் லிம் கோக் லியோங், சோபானித் மென் உடன் வெண்கலப் பதக்கத்தை பகிர்ந்து கொண்டார்.

கடந்த செவ்வாய் கிழமையன்று தனிநபர் 6-ரெட் போட்டியில் தேசிய ஸ்னூக்கரில் முதல் தங்கத்தை மோஹ் கீன் ஹோ பங்களித்த பிறகு, மலேசிய ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் நிர்ணயித்த இரண்டு தங்கங்களின் இலக்கை வெற்றி கண்டது.2011 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலேம்பாங்கிலும், 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஆடவர் இரட்டையர் போட்டியில் வென்ற பிறகு சுவான் லியோங் இப்போது மொத்தம் ஐந்து சீ தங்கத்தைப் பெற்றுள்ளார்.