இசைத்துறையில் பட்டம் பெறத் தமிழகம் செல்லும் மலேசிய குரலிசைகள்.

இசைத்துறையில் பட்டம் பெறத் தமிழகம் செல்லும் மலேசிய குரலிசைகள்.

கடந்த வெள்ளிக்கிழமை சோமா அரங்கில் நடந்த இசைப்பயண முன்னோட்ட குரலிசை பயிற்சி இசை ராகப்பயண கலை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடந்தது.

முதல் முறையாக மலேசியாவின் 20 கலைஞர்கள் கொண்ட இந்த இசைப்பயணம் வரும் 25/3/24 தமிழகம் பயணாமாகி அங்கு சினிமா பாடகி புகழ்மிக்க சுசிலா முன்னிலையில் குரலிசை அரங்கேற்றி அவரின் பொன்னான கரங்களில் குரலிசை பட்டம் பெறுவார்கள்  என ஏ டி ஆர் இசைப்பயிற்சி மஅப்பு கிருக்ஷ்ணதாக்ஷ் கூறினார்.

 இந்நிகழ்வில் ஓம்சு அறவாரியத்தின்  ஓம்சு பா. தியாகராஜன் பிரதநிதியாக அம்பாங் பொன் ரங்கன் சிறப்புரையாற்றி, ஓம்சு பா தியாகராஜான் அவர்களின் அன்பளிப்பாக 5 ஆயிரம் ரிங்கிட் வழங்க முன் வந்துள்ளதை அறிவித்தார். இந் நிகழ்வில் மஇகாவின் உதவித்தலைவர் டத்தோ முருகையா இன்னும் பலர் கலந்து பயிற்சி மாணவர்களின் அருமையான பழம்பாடல்களை கேட்டு நிகழ்ச்சிக்கு மெருகூட்டி ரசிகர்களை கவர்ந்தனர். வரும் 25/3/24 அன்று  கலைஞர்களின் பயண முன்னோட்ட மதிய வழி அனுப்பும் நிகழ்வு செந்தூல் கப்லா கறி அவுசில் மாலை மணி 5 அளவில் செந்தமிழ்ச் செல்வர் ஓம்சு பா. தியாகராஜன் தலைமையில் மாலை தேநீர் விருந்து உபசரிப்பு நிகழ்வில் கலந்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கூற  ரசிகர்களை தமிழ் ஆர்வலர்களை  அழைக்கப்படுகிறார்கள்.

தொடர்புக்கு 012 666 4652 திரு.  மாக்ஷ்டர் அப்பு கிருக்ஷ்ணதாக்ஷ் அவர்களுடன் தொடர்பில் வரலாம்.