இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசனில் 2.500 இடங்கள் ஒதுக்க வேண்டும்: சிவராஜ் வேண்டுகோள்.
இந்தியர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதாக பல முறை கூறியிருக்கும்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் , அதை நிறைவேற்றி வைப்பர் என எதிர்பார்ப்பு அதிகமாக
இருந்த வேளையில் அதில் ஒன்றுமே
நிறைவேற வில்லை என்ற வருத்தம்
இந்தியர்களின் மத்தியில் பேசும்
பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய மாணவர்களுக்கு 2.500 இடங்கள் மெட்ரிக்குலேச'னில் ஒதுக்க வேண்டுமென செனட்டர் சிவராஜ் கேட்டுக்கொண்டிருப்பது இந்தியர்களின் கவனத்தை பெரிதும்
ஈர்த்துள்ளது.
அவ்வாறு அதிக இடங்களை ஒதுக்கினால் மற்ற சமூகத்தின்
ஆதரவு இருக்காது என பிரதமர் தயங்குவது போல் தெரிகிறது.
என்னை பொறுத்த வரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அவர்களை பாராட்டவே செய்வார்கள் என்று மேலவை உறுப்பினர் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கூறினார்.