மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் வட்டாரப்பேரவை ஏற்பாட்டில் 114 பேர் இரத்த தானம்

114 people donate blood at Malaysia Hindu Sangam Skudai Regional Council

மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் வட்டாரப்பேரவை  ஏற்பாட்டில் 114 பேர்  இரத்த தானம்
மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் வட்டாரப்பேரவை  ஏற்பாட்டில் 114 பேர்  இரத்த தானம்

Date :17 Feb 2025 News By:Rm Chandran 

விவேகானந்தர் 162 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடை பெறுவதாக  சேகரன் தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்கம், ஸ்கூடாய் வட்டாரப்பேரவை ஏற்பாட்டில் மைதீன் மால், எச்.எஸ்.ஏ மருத்துவமனை மற்றும் யயாசான் பிஜாயாங் இணை ஆதரவில் கடந்த 16-02-2025 காலை  10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இரத்த தான முகாம், முத்தியாரா ரினி மைதீன் மாலில் சிறப்பாக நடைபெற்றது

.

  153 பேர் பதிவு செய்ததில் 114 பேர் இரத்த தானம் செய்து தங்களின் சமூக பங்களிப்பை ஆற்றியதாக சேகரன் கூறினார். இந்நிகழ்வில் கோத்தா இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பாண்டா, யாயாசன் பிஜாயாங் இஸ்கண்டார் புத்ரி உறுப்பினர் புவான் அசிசா மற்றும் மஇகா இஸ்கண்டார் புத்ரி தொகுதிச் செயலாளர் திரு விஜயன் மற்றும் அவர்தம் துணைவியார் திருமதி பத்மாவதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 
இந்த நிகழ்வை மலேசிய இந்து சங்கம் இளைஞர் பகுதி திரு. செல்வேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றதாக  கூறிய  மலேசியா இந்து சங்கம் ஸ்கூடாய் வட்டாரத்தலைவர் திரு. சேகரன்

,
மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த இரத்ததான முகாமில் 150 பேர் இரத்த தானம் வழங்க முன் வந்த நிலையில் 114 பேர் மட்டுமே இரத்த தானம் வழங்க முடிந்தது. 39 பேர்  சில காரணமாக தவிர்க்க வேண்டிய  நிலை ஏற்பட்டதை குறிப்பிட்டார்.

 இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் திரளாக கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியது பெருமையாகும் என்று மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் வட்டரா பேரவை தலைவர் திரு. கே .சேகரன் தெரிவித்தார்.

மேல் விவரங்களை பெற திரு. கே.சேகரன்  012- 7083252
திரு.எஸ். செல்வேந்திரன் 017-7110412