11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
11th World Tamil Research Conference
21 July 2023
கோலாலம்பூர்:
மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு உலக தமிழர்களை ஒண்றினைத்துள்ளது.
ஓம்ஸ் அறவாரியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆதரவில் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை ஏற்பாட்டில் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இன்று காலை மலாயா பல்கலைக்கழகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
மாநாட்டில் இணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் இந்த மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது.
அதே வேளையில் மாநாட்டின் நிர்வாக குழு தலைவர் ஓம்ஸ் பா. தியாகராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
இம்மாநாட்டிற்கு மலேசியாவை தவிர்த்து அனைத்துலக ரீதியில் இருந்து பேராளர்கள் தற்போது மலாயா பல்கலைக்கழகத்தில் ஒன்றுக் கூடியுள்ளனர்.
மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மாநாட்டை நாளை 5 மணி மணிக்கு திறந்து வைக்கவுள்ளார்.
மனிதவள அமைச்சர் சிவக்குமார் உட்பட பல உள்ளூர் அனைத்துலக பிரமுகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.