பேரா கிரியான் கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 122 ஆம் ஆண்டு வரலாற்று விழா
122nd Anniversary of Perak Kiriyan kula Garden Tamil School
Date 30 DEC 2024 News By: கோவி.சந்திரன்
பேரா கிரியான் மாவட்டம் கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 122 ஆம் ஆண்டு வரலாற்று விழா கடந்த 29.12.2024- ஞாயிறு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இப்பள்ளி தோட்ட நிருவாகத்தினரால் ( sugar cultivation Company ) 1902 ஆண்டு பேரா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளியில் தற்போது 23 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.
1950 களில் இப்பள்ளியில் ஏறக்குறைய 70க்கும் அதிகமான மலாய்க்கார மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர் என்பது வரலாறாகும். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 800க்கும் அதிகமான முன்னாள் மாணவர்கள் இவ்வரலாற்று விழா நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர். பேரா மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம் அவர்களும் அலோர் பொங்சு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அஜி சாம் பின் மாட் சஹாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வரலாற்றுக்குரிய நிகழ்ச்சியில் பள்ளியின் மூத்த முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் பள்ளி தோட்டக்காரர்கள் , பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் சாதனைப் படைத்த மாணவச் செல்வங்களும் சிறப்பிக்கப்பட்டனர். தமிழர் பண்பாட்டு நடனங்களுடன் இவ்விழா இனிதே தொடங்கி நிறைவு பெற்றது.
www.myvelicham.com - face book MyVelicham.com - Tik Tok MyVelichamnews / Share 10 Whats Groups