மலேசிய இந்தியர் முன்னாள் முப்படை வீரர்கள் சங்கத்தின் 16 ஆவது ஆண்டுக்கூட்டம்.

16th Annual Meeting of the Malaysian Indian Ex-Servicemen Association

மலேசிய இந்தியர் முன்னாள் முப்படை வீரர்கள் சங்கத்தின் 16 ஆவது ஆண்டுக்கூட்டம்.
மலேசிய இந்தியர் முன்னாள் முப்படை வீரர்கள் சங்கத்தின் 16 ஆவது ஆண்டுக்கூட்டம்.

Date :10 March 2025 News By : RM Chandran 

மலேசிய இந்தியர் முன்னாள் முப்படை வீரர்கள் சங்கத்தின் 16 ஆவது ஆண்டுக்கூட்டம்.

அண்மையில்  மலேசிய இந்தியர் முன்னாள் முப்படை வீரர்கள் சங்கத்தின் 16 ஆவது ஆண்டுக்கூட்டம்  ஜொகூர், ஸ்கூடாய் MBIP மண்டபத்தில்  சிறப்பாக நடை பெற்றது.

'ஒன்றுபடுவோம் உதவுவோம்'
எனும் கருப்பொருளை கொண்டு ஆரம்பமான நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக சுல்தானா ரொஹையா அறக்கட்டளை தலைவர் SAC (B) YB
டத்தோ சுகுமாறன் ராமன்,
Timbalan Pengarah Jhev Johor, Keptan  Muhammad Firdaus bin Bakri, புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சுஹைசான், இந்தியர் சமூக சிறப்பு பிரதிநிதி ரவிதாஸ்,பணி ஓய்வு பெற்ற மேஜர் சண்முகம் முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் பாதுகாப்பை முன்னிருத்தி மலேசிய இராவணுத்தில் பணியாற்றிய மலேசிய இந்தியர் முன்னாள்  முப்படை வீரர்கள் தியாகம் அற்பணிப்பு, நாட்டுபற்று பாராட்டுக்குரியது என்று டத்தோ ஆர்.சுகுமாறன் புகழ் மாலை சூட்டினார்.

தங்களுடைய குடும்பத்தை பாராமல்
நாட்டிற்கும் வீட்டிற்கும் உழைத்த  அவர்களின் கடமை உணர்வுகள் மிகவும் உயர்வானது என்று கூறிய  டத்தோ சுகுமாறன்,

'நாடு  உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே ! நாட்டிற்கு நீ என்ன செய்தாய் என்று கேள்' என்பது போல இந்தியர்கள் இந்த நாட்டிற்கு பல்வேறு வகையான தியாகங்களை
செய்துள்ளார்கள் என்பதை  இன்றைய இளைய
தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டும். 

அதேவேளை பணி ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ பணியாளர்கள் நம் சமுதாய இளைஞர்களை நல் வழி படுத்தும் ஆலோசனைகள், நன்னெறிகள், நற்பண்புகள் புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் பண்பு, இன உணர்வு ஒற்றுமை போன்றவற்றை கற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமென்று  சுல்தானா ரொஹையா அறக்கட்டளை தலைவர் SAC (B) YB. டத்தோ சுகுமாறன் ராமன் கேட்டுக்கொண்டார்.