39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரக் குழந்தைகள்; உலக சாதனைப் படைத்த இந்தியர்!

39 Wives, 94 Children, 33 Grandchildren; Indian breaks world record

39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரக் குழந்தைகள்; உலக சாதனைப் படைத்த இந்தியர்!

Date : 21 March 2025 News By:Jayarathan 

39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரக் குழந்தைகள் கொண்ட இந்திய நபர், உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் என்ற சாதனைப் படைத்தது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.  மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த சியோனா என்ற நபர் கடந்த ஜூலை 12, 1945இல் பிறந்தார். இவர் தனது முதல் மனைவியான ஜதியாங்கி என்ற பெண்ணை, தன்னுடைய 17 வயதில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, அவர் தொடர்ச்சியாக 38 பெண்களை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கடைசியாக, தன்னை விட 3 வயது மூத்த பெண்ணை கடந்த 2004இல் திருமணம் செய்து கொண்டார். 

இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு, 94 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். தன்னுடைய பிள்ளைகள் மூலம், சியோனாவுக்கு 33 பேரக் குழந்தைகள் உள்ளனர். சியோனா, உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் என்ற உலக சாதனையைப் படைத்தார். இதன் மூலம், அவரது குடும்பம் கடந்த 2021ஆம் ஆண்டில் ‘மிகப்பெரிய குடும்பம்’ என்ற உலக சாதனை அகாடமியில் பட்டியலிடப்பட்டது. 2011இல் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பட்டியலிலும், 2019இல் லண்டன் உலக சாதனை பட்டியலிலும் இவரது குடும்பம், ‘மிகப்பெரிய குடும்பம்’ என்ற பட்டியலில் இடம்பெற்றது. 

நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு வந்த சியோனா, கடந்த 2021இல் தன்னுடைய 76 வயதில் இறந்தார். இவரது மறைவுக்கு, அப்போதைய மிசோரம் முதல்வர் சோரம்தங்கா, காங்கிரஸ் தலைவர் லால் தன்ஹவ்லா ஆகிய முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

www.myvelicham.com / face book / you tube / tik tok