இந்தியர்கள் மட்டுமே போட்டியிடும் 4 சட்டமன்றத் தொகுதிகள்
4 Assembly constituencies where only Indians are contesting
30 July 2023
6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அபூர்வமான திருப்பமாக – 4 சட்டமன்றத் தொகுதிகளில் – பல கட்சிகளைப் பிரதிநிதித்து இந்தியர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
அந்த 4 தொகுதிகள் பின்வருமாறு:
பிறை (பினாங்கு)
பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி 3 தவணைகளாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த பிறை சட்டமன்றத் தொகுதியில் அவருக்குப் பதிலாக டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமுவை ஜசெக நிறுத்தியிருக்கிறது.
அவரை எதிர்த்து ஜசெகவின் நீண்ட கால உறுப்பினரும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினருமான டேவிட் மார்ஷல் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.
மூடா கட்சி சார்பில் விக்னேஸ்வரி ஹரிகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேசியக் கூட்டணி சார்பில் ஆர்.சிவசுந்தரம் (கெராக்கான்) போட்டியிடுகிறார்.
பாகான் டாலாம் (பினாங்கு)
பினாங்கு மாநிலத்தில் பாகான் டாலாம் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இந்தியர்களாவர். ஜசெக சார்பில் கெல்வின் என்ற குமரன் கிருஷ்ணன் போட்டியிடுகிறார். கடந்த தவணை இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்த சதீஸ் முனியாண்டி மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அந்தத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் ஜெயராமன் கே.குஞ்சு கண்ணு போட்டியிடுகிறார். இவர் பாஸ் கட்சியின் இந்தியர் பிரிவைச் சேர்ந்தவராவார். பினாங்கு ஃப்ராண்ட் பார்ட்டி (Penang Front Party) என்ற கட்சியின் சார்பாக ராஜசாகனன் சின்னக் கண்ணு இங்கு போட்டியிடுகிறார்.
செந்தோசா (சிலாங்கூர்)
சிலாங்கூர் மாநிலத்தில் சுமார் 43 விழுக்காட்டு இந்தியர்களை வாக்காளர்களாகக் கொண்ட சட்டமன்றத் தொகுதி செந்தோசா. கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் தொகுதி. பிகேஆர் கட்சி சார்பில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராக இங்கு மீண்டும் களம் காண்கிறார் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ். அவரை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் ஜி.பரமேஸ்வரன் (கெராக்கான்) போட்டியிடுகிறார். மூடா கட்சியும் இங்கே போட்டியிடுகிறது. மூடா சார்பில் ஆசிரியை தனுஷா போட்டியிடுகிறார். பிஆர்எம் கட்சி சார்பில் ஜெய்சந்திரன் வடிவேலு போட்டியிடுகிறார்.
புக்கிட் காசிங் (சிலாங்கூர்)
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதி புக்கிட் காசிங். இங்கு ஜசெக சார்பில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார் ராஜிவ் ரிஷ்யாகரன். இவரை எதிர்த்து மூடா கட்சி சார்பில் போட்டியிடுகிறார் கல்யாண ராஜசேகரன். இவர் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் தலைவரும் பிரபல வணிகருமான டத்தோ வீ.கே.கே.தியாகராஜனின் புதல்வராவார்.
பெரிக்காத்தான் சார்பில் கெராக்கான் கட்சியின் நல்லன் தனபாலன் புக்கிட் காசிங் தொகுதியில் போட்டியிடுகிறார்.
N 31 .ஜெயா சட்டமன்றத்தில் பேரிக்காதான் நேஷனல் பிரபல படத்தயாரிப்பாளரும் நகைச்சுவை நடிகருமான காண போட்டியிடுகின்றார்