கங்கார் பூலாய் காரைநகர் நட்புறவு மையத்தில் 4வது முறையாக நடைபெறும் மலாய் மொழி பயிற்சி முகாம்

4th Malay Language Training Camp at Kangar Pulai Karainagar Friendship Centre

கங்கார் பூலாய் காரைநகர் நட்புறவு மையத்தில் 4வது முறையாக நடைபெறும் மலாய் மொழி பயிற்சி முகாம்
கங்கார் பூலாய் காரைநகர் நட்புறவு மையத்தில் 4வது முறையாக நடைபெறும் மலாய் மொழி பயிற்சி முகாம்

Date : 07 Feb 2025 News By: Tamil

 கங்கார் பூலாய் காரைநகர் நட்புறவு மையத்தில் 4வது முறையாக நடைபெறும் மலாய் மொழி பயிற்சி முகாமின் தொடக்கவிழா தொடங்கப்பெற்றது.

 காரைநகர் நட்புறவு மையத்தின் செயலவையினர் திரு.புன்னியநாதன் . தலைவர் திரு.திருமாறன் அவர்கள் அவரது உரையில் காரைநகர் நட்புறவு மையத்தின் செயல்பாட்டினை விளக்கி கூறினார். அதோடு, அதி வளர்ச்சியடைந்து வரும் இஸ்கண்டார் புத்திரி மாவட்டத்தில் தமிழர்கென ஒரு சமூக சேவை மையம் இருப்பதை கண்டு நாம் பெருமைபடுவதோடு தங்களின் முழு ஒத்துழைப்பினையும் தரும்படி வருகைபுரிந்தோரிடம் கேட்டுக்கொண்டார்.

 கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.அழகேந்திரன்  அவரது உரையில் கங்கார் பூலாய் பழைய தமிழ்ப்பள்ளியை காரைநகர் நட்புறவு மையம் என இந்த நிர்வாக குழுவினர் கங்கார் பூலாய் தமிழ் மக்களுக்கென நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர். அதில் ஒன்றுதான் இந்த 21 நாள் மலாய் மொழி பயிற்ச்சி முகாம். 

மலாய் மொழியில் பின் தங்கிய மாணவர்களை அம்மொழியில் திறம்பட வைப்பதுதான் இம்முகாமின் நோக்கம் என இம்முகாம் பற்றிய தெளிவான விளக்கத்தை தலைமை பொறுப்பாளரான திரு.செல்வராஜ் அவர்கள் பெற்றோர்களுக்கு விளக்கமளித்தார். 

அதோடு, இம்முகாமின் பொறுப்பாளர்களை ஒருவர் பின் ஒருவராக செல்வன்.சசிக்குமார் அறிமுகப்படுத்தினார்.

அதன்பின், தனது நன்றியுரையில் உதவி வரைத்தன்று உதவி உதவியாம் செயல்பட்டார் சால்பின் வரைத்து என்ற திருக்குறளுக்கொப்ப இம்முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு உதவி செய்த  அனைவருக்கும் காரைநகர் நட்புறவு மையம் சார்பாக துனைச் செயலர் செல்வன் சங்கத் தமிழன் நன்றி கூறினார்.