The Tamils என்ற பெயரில்  புத்தக வெளியீடும் கண்டது.

A book was also published under the name The Tamils.

The Tamils என்ற பெயரில்   புத்தக வெளியீடும் கண்டது.

Date:12 April 2025 News By: Punitha Perumal 

மலேசிய இந்திய பாரம்பரியக் கழகம் மற்றும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய கலாச்சாரம் மையம் ஆகியவை ஒன்றிணைந்து ஊடகவிலாளர் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் நிர்மலா லட்சுமணனுடன் ஓர் இனிய மாலை சந்திப்பு என்ற நிகழ்ச்சி கடந்த 10 எப்ரல் 2025 அன்று, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய கலாச்சாரம் மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் செல்லியல் ஆசிரியர் திரு. முத்தரசு அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நிர்மலா லட்சுமணயன் பதிலளித்தார். ஆனால், இணையத் தளம், செயற்கை நுண்ணறிவு மற்றும் அச்சு ஆகிவற்றுக்கு உள்ள வேறுபாடுகள் குறித்த கேள்விக்கு அவர் இறுதிவரை பதிலளிக்கவில்லை. 

இந்த நிகழ்ச்சியில் நிர்மலா லட்சுமணன் அவர்கள் எழுதிய The Tamils என்ற பெயரில் ஒரு  புத்தக வெளியீடும் கண்டது. இவர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒருசில சிறுகதை புத்தகங்கள் தமிழகத்தின் பாடத்திட்டங்களில் இணைக்கப் பட்டுள்ளதாகவும் அறிகிறோம். 

சிறப்பு அம்சமாக, தமிழ் மற்றும் ஆகிய மொழிகளில் வழிநடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில்,  செல்லியரல் ஆசிரியர் திரு. முத்தரசு, கல்விச் சேவகர் ஓம்ஸ். தியாகராஜன், மதிப்புமிகு டான்ஸ்ரீ க. குமரன், திரு. மன்னர் மன்னர், இந்திய துணை ஆணையர் Ms. ஷர்மிளா மற்றும் பல சிறப்புப் பிரமுகர்கள் கலந்துச் சிறப்பித்தனர்.

www.myvelicham.com