கலைத்துறையில் மின்னும் நட்சத்திரமாக பவனிவரும் அ.மைக்கல் பீமன்

A. Michael Beeman is a shining star in the field of art

கலைத்துறையில் மின்னும் நட்சத்திரமாக பவனிவரும் அ.மைக்கல் பீமன்
கலைத்துறையில் மின்னும் நட்சத்திரமாக பவனிவரும் அ.மைக்கல் பீமன்

Date :16 Dec 2024  News By :RM Chandran 

 உள்ளூர் கலைஞர்களை வைத்து நாடும் முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் அ.மைக்கல் பீமன்,  இதுவரையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியவர் என்ற பெருமையை பெற்று மலேசியாவில் சாதனை படைத்து வருகிறார்.

 அ.மைக்கல் பீமன்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கலைத்துறையில் மின்னும் நட்சத்திரமாக பவனிவரும் அ.மைக்கல் பீமன், இலைமறை காயாக இருக்கும் பல கலைஞர்களுக்கு அடையாளம் முத்திரையுடன் முகவரி கொடுத்தவர்  என்பதை  பல கலைஞர்களும் அறிவர்.

 

பழைய,பபுதிய  கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு  கலைத்துறையில் முகவரி கொடுத்தவர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

நம் உள்ளூர் கலைஞர்களை வைத்து பல மேடை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வரும் மைக்கல் பீமன் அவர்களின்  கலைத்துறை சேவைகளை மதித்து  அண்மையில்  மை வெளிச்சம். கோம்  மை மீடியா, மை நியூஸ்  அன்னாருக்கு 'கலைத்துறை சாதனையாளர்' விருது வழங்கி சிறப்பு செய்தது

.

தீபாவளிப் பண்டிகை, அன்னையர், தந்தையர், மகளிர் தினங்களை நாம் அனுசரிக்கும்  நிலையில் அவற்றை சிறப்பிக்கும் வகையில் இலவசமாக கலை நிகழ்ச்சிகளை படைப்பதும், அவ்வாறான நிகழ்ச்சியில் மைய அங்கமாக சிலரை சிறப்பிப்பதை  நடைமுறை படுத்தி  வருவது மைக்கல் பீமன் அவர்களின் தனியொரு பாணியாகும்.

இவற்றுடன்  சிரமமான கால கட்டத்தில் நிதி உதவிகள் தேவைப்படும் மக்களை கண்டறிந்து  அவர்களுக்கு பண உதவிகள் செய்வதற்கும் மந்தின், தமிழ் மணி மன்றம்  மூலமாக கலை நிகழ்ச்சிகளை  ஏற்பாடு செய்து அதன் வழி கிடைக்கப்பெறும் நிதிகளை கொண்டு  மனித நேய உதவிகளையும்  அ. மைக்கல் பீமன் செய்தும் வருகிறார்.

எந்தவொரு வருமானம் ஏதுமின்றி இது போன்ற கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவதோடு மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக விளங்கி வருவது மைக்கல் பீமன் அவர்களின் தனிச்சிறப்பு.

அதனால்தான் என்னவோ அவர் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கு  கருணை மனம் படைத்த நல்லுள்ளங்களும் மற்றவருக்கு உதவி கரங்கள் நீட்டும் நல் நெஞ்சங்களும்  அவர்களாகவே முன் வந்து பல நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

நம் மலேசிய நாட்டை  பொறுத்த வரையில் மைக்கல் பீமன் அளவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகமான கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களை  அலசி ஆராய்ந்து பார்க்கும் போது நம் ஆய்வுகளுக்கு எட்டிய  வரை  எவருமே இல்லை என்றும் தெளிவாகிறது.

மேலும் இது போன்ற கலை நிகழ்ச்சிகளையும் புதிய கலைஞகர்களுக்கு முகவரி கொடுத்து வரும் கலைஞர் அ.மைக்கல் பீமன் அவர்களின் கலைச்சேவைகள் தொடர வேண்டுமென மை வெளிச்சம் வாழ்த்துகளை கூறி வரவேற்கிறது.

www.myvelicham.com- Face Book -You Tube -TIK TOK-