பேராக்கில் பன்றிப் பண்ணைகள் குறித்து ஏ. சிவநேசன் இந்த கூற்றுகளை மறுத்தார்.

A Sivanesan refuted these claims about pig farms in Perak.

பேராக்கில் பன்றிப் பண்ணைகள் குறித்து ஏ. சிவநேசன் இந்த கூற்றுகளை மறுத்தார்.
பேராக்கில் பன்றிப் பண்ணைகள் குறித்து ஏ. சிவநேசன் இந்த கூற்றுகளை மறுத்தார்.

Date : 24 April 2025 News By: RM Chandran 

பேராக்கில் பன்றிப் பண்ணைகள் நவீனப்படுத்தும் திட்டத்தை
துரிப்படுத்த வேண்டும் என்றார் உரிமை கட்சித் தலைவர் 
பி. இராமசாமி .

காலாவதியான, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் விவசாய முறைகளை பராமரிக்கப்பட்டால், ஆறுகள் மற்றும் பல நீர் நிலைகள் தொடர்ந்து மாசுப்படும் என்று உரிமை  கட்சித்த்தலைதலைவர் பி.ராமசாமி தெரிவித்தார். 

பேராக்கில் பன்றி வளர்ப்பு பண்ணைகள் நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் தாதமதாகி வருகிறது. 

மூடப்பட்ட அமைப்புகளை பயன்படுத்துவது, முறையாக கழிவுகளை வெளியேற்றுவது போன்ற நவீன நுட்டங்கள் பன்றிப் பராமரிப்புகளில் பயன்படுத்துவது, ஏற்கனவே பல வளர்ந்த நாடுகளில் பின் பற்றி வருகின்றன. 

அதனை நவீன,அறிவியல் திட்டத்தின் பண்ணைகளின் எண்ணிக்கையும், அதன் அளவையும் அதிகரிக்க அரசிடம் நீண்டகால வியூகம் இருக்க வேண்டும் என்பதோடு
ஒரு கட்டமைப்பட்ட வளர்ச்சித் திட்டம், சுற்றுச் சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்றும்

 ஆயர் கூனிங்  இடைத் தேர்தலில், கம்போங் தஞ்சோங் கெராமாட் அருகே, ஒரு சட்டவிரோத பன்றிப் பண்ணை இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறியதை அடுத்து முன்னாள்  2ஆம் துணை முதல்வருமான பேராசிரியர் பி. இராமசாமி மேற்கண்டவாறு கூறினார்

.

இதற்கு பதிலளித்த பேராக் மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ. சிவநேசன் இந்த கூற்றுகளை மறுத்து, இப்பகுதியில் இதுபோன்று ஒன்பது பண்ணைகள் மட்டுமே உள்ளன என்றார். 

www.myvelicham.com / face book / Tik Tok / Intg / You Tube / Linkedin / whats aap