வங்கி ஊழியர்களின் நடத்திய மறியல்
A strike by bank employees

News By:RM Chandran Date:19August 2024
தொழிற்சங்கத்தை புறகணிக்கும்
போக்கை நிறுத்த வேண்டும் என்றார் ஷோயா.
வங்கி ஊழியர்களின் தேசிய சங்கத்திற்கு எதிராக வங்கிகள் நடத்தியதாகக் கூறப்படும் புறக்கணிப்பு தொடர்பாக பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு அனைத்துலக தொழிற்சங்கங்கக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.
அனைத்துலக தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆசிய பசிபிக் ஒரு குறிப்பிட்ட வங்கியின் தலைமையில் பல வங்கிகளால் தொடர்ச்சியான தொழிற்சங்களை புறக்கணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியது.
நிதி அமைச்சராக இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,
தொழிற்சங்க புறக்கணிப்பை உடனடியாகத் தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஆசிய பசிபிக் பொதுச் செயலாளர் ஷோயா யோஷிடா, கேட்டுக்கொண்டார்.