வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து
Accident on North-South Highway.
Date : 24 Dec 2024 News By : Rm Chandran
சுற்றுலாப் பேருந்து, MPV மற்றும் டிரெய்லர் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கைகளின் தளபதி கைருல் நிஜாம் அனுவார் கூறினார்.
அலோர் காஜா,வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 204 கிலோ மீட்டரில் வடக்கு நோக்கிய ஆயர் குரோ ஓய்வு பகுதிக்கு அருகில் மூன்று வாகனங்கள் மோதியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர்.
27 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து, ஒரு டிரெய்லர் மற்றும் டொயோட்டா எஸ்டிமா எம்பிவி ஆகிய வாகனங்களில் விபத்து ஏற்பட்டதாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் பிசார் அஜீஸ் தெரிவித்தார்.
www.myvelicham.com