கோலலங்காட் தொகுதியில் தலைவர் பதவியை கைப்பற்றினார் அஃபிக்
Afiq wins Kuala Langat constituency president's post
Date : 13 April 2025 News By: Maniventhan
கோலலங்காட் தொகுதியில் தலைவர் பதவியை கைப்பற்றினார் அஃபிக்
12-4-2025 சனிக்கிழமை நடைபெற்று முடிந்த பி.கே.ஆர்.கட்சியின் தொகுதி நிலையிலான தேர்தலில் கோலலங்காட் தொகுதியில் தலைவர் பதவிக்கு போடியிட்ட முகமட் அஃபிக் பின் முகமட் துனிமான் 2610 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட கோலலங்காட் தொகுதியின் நடப்பு தலைவரும் கோலலங்காட் தொகுதியின் ஒருங்கிணைப்பாளருமான ஹரிதாஸ் இராமசாமி 1916 வாக்குகள், தான் கெக் சியாங் 1849, டேவிட் சோங் 1070 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தனர்.
துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ வீ.சுந்தர்ராஜூ தேர்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.ஞானசேகரன், சு.கணேசன், இர்வான் பின் இஸ்மாயில், ஷரிசாம் பின் ஒஸ்மான், அ.கருணாகரன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
உதவித் தலைவர் பதவிக்கு கு.பன்னீர்செல்வம் தேர்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டத்தோ அ.கோபிநாதன், முகமட் நஜிப் பின் முகமட் சாட் , முனியாண்டி பத்துமலை ஆகியோர் தோல்வியடைந்தனர்.
மகளிர் பகுதி தலைவர் பதவிக்கு ஜி.உமாநந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரா.கலா, கு.நிர்மலாதேவி, பைசா பிந்தி அரிபின் ஆகியோர் தோல்வியடைந்தனர்
.
இளைஞர் பகுதி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரிஃஹான் ரஹிமி பின் மாமுட் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரா.யோகபாரதி, சு.நவீன்ராஜ், அமீர் பித்ரி பின் அமிசோன், சு. சுரேந்திரன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
Date :13 April 2025 News By: Maniveknthan