கோலலங்காட்டில் இந்திய சிறு வணிகர்களுக்காக ஐ சீட் வழி ஒரு லட்சம் 37 ஆயிரம் பெறுமானமுள்ள உதவிப் பொருட்கள் 

Aid items worth Rs 137,000 distributed through iSeat for Indian small traders in Kuala Langat 

கோலலங்காட்டில் இந்திய சிறு வணிகர்களுக்காக ஐ சீட் வழி ஒரு லட்சம் 37 ஆயிரம் பெறுமானமுள்ள உதவிப் பொருட்கள் 
கோலலங்காட்டில் இந்திய சிறு வணிகர்களுக்காக ஐ சீட் வழி ஒரு லட்சம் 37 ஆயிரம் பெறுமானமுள்ள உதவிப் பொருட்கள் 


                       மணிவேந்தன் பந்திங் ஜன 21, 

    இந்திய சிறு வணிகர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிலாங்கூர் மாநில அரசின் ஐ சீட் வழி கோலலங்காட் இந்திய சிறு வணிகர்களுக்காக ஒரு லட்சம் 37 ஆயிரம் பெறுமானமுள்ள தொழில் நடத்துவதற்கான பொருட்கள் வழங்கப்பட்டது.

   கோலலங்காட் மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 22 சிறு தொழில் வணிகர்களுக்கு இப்பொருட்கள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு அவர்களால் வழங்கப்பட்டது

உதவிப் பொருட்கள் பெற்றவர்கள் அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் வழங்கப்பட்ட பொருட்களை கொண்டு தங்கள் வாணிபத்தை பெருக்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பாப்பா ராய்டு கேட்டுக் கொண்டார். 

வழங்கப்பட்ட பொருட்களை சம்பந்தப்பட்டவர்கள் முறையாகவும் சரியாகவும் பயன்படுத்துகிறார்களா என்பதை ஐ சீட் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் இதில் ஏதேனும் குறைகள் கண்டு பிடிக்கப்பட்டால் வழங்கப்பட்ட பொருட்கள் மீட்டுக் கொள்ளப்பட்டு தகுதியான மற்றவர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய சிறு வணிகர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள  ஐ சீட் துறைக்கு மாநில அரசு 10 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதைக் கொண்டு மாநிலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் உள்ள இந்திய சிறு வணிகர்களுக்கு தொழில் நடத்துவதற்கான உதவிப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் தற்போது ஏழு மாவட்டங்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள உலு சிலாங்கூர், சபாக் பெர்ணம் ஆகிய மாவட்ட இந்திய சிறு வணிகர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.