ஏர் ஆசியா கம்போடியா சிறகடிக்க தயார் நிலை

AirAsia Cambodia ready to take off

ஏர் ஆசியா கம்போடியா சிறகடிக்க தயார் நிலை
ஏர் ஆசியா கம்போடியா சிறகடிக்க தயார் நிலை

By News RM Chandran

கம்போடியாவில் புதிய விமான நிறுவனமான ஏர் ஆசியா கம்போடியா உள்நாட்டில் சிறகடிக்க தயார் நிலையில் உள்ளது.
முதல் கட்டமாக பெனோம் பென்,சிம் ரிப் மற்றும் சிஹானுக்வில்லே ஆகிய நகர்களுக்கு ஏர் ஆசியா கம்போடியா தனது சேவையை மேற்கொள்ள இருக்கிறது.

எதிர்வரும் மே 2 ஆம் தேதி 2024 ஏர் ஆசியா கம்போடியா முதலாவது விமான சேவையை மேற்கொள்ள உள்ளது. இந்த உள்நாட்டு விமான சேவைகளுக்கு 2 A 320 ரக விமானங்களை ஏர் ஆசியா கம்போடியா பயன்படுத்தவிருக்கிறது.

தற்போது 6,000 இலவச இருக்கைகள் பதிவிற்கு உள்ளது.2 மே 2024 முதல் 29 மார்ச் 2025 வரை பயணிகள் பயணிக்கலாம்.ஏர் ஆசியா மூப் ஆப் மூலம் பயணிகள் டிக்கெடுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.
அனைத்து டிக்கெட் பதிவிக்கான கட்டணத்திற்கு ஓரியண்டல் வங்கி கட்டண சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனிடையே ‘எங்களது பயணத்தில் இது ஒரு உற்சாகமான தருணம்’ என ஏர் ஆசியா கம்போடியா தலைமை செயல்முறை அதிகாரி விஸ்சோத் நாம் கூறினார்

.


‘கம்போடிய மேகத்தை செவ்வானமாக்க நாங்கள் தொடங்கி விட்டோம். குறைந்த கட்டணத்தில் பயணிகள் பறக்க செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்’என்றார் அவர்.
இந்த உள்நாட்டு விமான சேவைகளின் மூலம் பயணிகள் கம்போடியாவில் நீண்ட நாள் தங்கி செல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்தும் அடங்கிய ஒருவழிப் பயண கட்டணம் USD 49 தான் என அறிவிப்பதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.
ஏர் ஆசியா கம்போடியா விமான சேவையின் மூலம் உள்நாட்டவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தர முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கம்போடியா …
கோத்தா கினபாலுவிலிருந்து மனாடோ நகருக்கு ஏர் ஆசியா புதிய நேரடி விமானச் சேவை
செப்பாங் மே 5-கோத்தா கினபாலுவிருந்து இந்தோனேசியாவின் வட சுலாவெசியில் உள்ள மனாடோ நகருக்கு ஏர் ஆசியா நேரடி விமானச் சேவையைத் தொடங்குகிறது.
ஜாக்கார்த்தாவை தொடர்ந்து இந்தோனேசியாவிற்குச் சபாவிலிருந்து ஏர் ஆசியா மேற்கொள்ளும் இரண்டாவது நேரடி விமானச் சேவை இதுவாகும்.

எதிர்வரும் 1 ஆம் தேதி செப்டம்பர் 2024 முதல் வாரத்திற்கு 3  முறை இந்த புதிய விமானச் சேவையை உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான ஏர் ஆசியா மேற்கொள்ளவிருக்கிறது.
இந்த புதிய விமானச் சேவையின் மூலம் கோத்தா கினபாலுவிருந்து 13 நகர்களுக்கு ஏர் ஆசியா அனைத்துலக விமானச் சேவையை மேற்கொள்கிறது. இத்தன்வழி வாரத்திற்கு 83 அனைத்துலக விமானச் சேவைகளை ஏர் ஆசியா மேற்கொள்கிறது

.

இந்த புதிய விமானச் சேவையைக் கொண்டாடும் வகையில், கோத்தா கினபாலுவிருந்து மனாடோ நகருக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழிப் பயண கட்டணம் வெ 139 மற்றும் மனாடோ நகரிலிருந்து கோத்தா கினபாலுவிற்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழிப் பயண கட்டணம் Idr 468,020 தான்.

வட சுலாவெசியின் தலைநகரான மனாடோ இயற்கை அழகுகளைக் கொண்ட ஒரு நகரமாகும்.

இந்த நகரில் நீருக்கு அடியிலான அழகான நிலப்பரப்பு சுற்றுப்பயணிகளை அதிகம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த நகரில் உள்ள கிலாமாட் மலையின் இயற்கை அழகு மற்றும் அழகான சுற்றுச்சூழல் சுற்றுப் பயணிகளை அதிகம் கவரச் செய்யும்.

மேலும் இந்த நகரில் உள்ள பான் ஹின் கியோங் கோயில் சுற்றுப் பயணிகளைக் கவரும் மற்றொரு அம்சமாகும்.