மந்திரச் சொல்லை கேலி செய்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது
Arulmigu Muruga Peruman Magic word Ridiculous action Very reprehensible

Date :05 March 2025 News By:Ganapathy
அண்மையில் ஏரா FM வெளியிடட்ட கேலி காணொலி மலேசிய நாட்டிலுள்ள அனைத்து இந்துப் பெருமக்களின் மனங்களைப் பாதித்துள்ளது. ஒரு சமயத்தின் தாத்பரியத்தை அறியாமல், அதனை கேலித்தனமாக விமர்சனம் செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தண்து என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துள்ளது.
அருள்மிகு முருகப் பெருமானுக்கு காவடி எடுக்கும் வேளையில், அவரது மந்திரச் சொல்லான “வேல் வேல்” என்ற சொல்லுக்கு சிரித்துக் கொண்டே கேலி செய்ததும், நடமாடி இருந்ததும் ஏற்றுக் கொள்ள முடியாதது அந்த ஏரா எஃப் வானொலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
பல்லினங்கள் – பல சமயங்களைப் பின்பற்றும் இம்மலேசிய நாட்டில், ஏற்றுக் கொள்ள முடியாத நிலையினை இந்து சங்கம் மிகவும் கண்டிக்கின்றது.
அந்தப் பணியாளர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தாலும்கூட, அந்த வானொலி நிலையம் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இந்நாட்டில் உள்ளவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்க வேண்டும்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து அனைத்து இந்துப் பெருமக்களும் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதன், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்..
இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு சமயத்தவரும், நல்லிணத்தைப் பேணி பாதுக்க வேண்டும் என்பது அவசியமாகும். போன்ற கேலி செய்வதும், மற்ற மதத்தினை புண்படுத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.
மலேசிய இந்து சங்கம் இதுபோன்ற செயல்களை அணுக்கமாக கண்காணித்து வருகிறது. இருப்பினும், இந்நடவடிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தொடர்புத் துறை அமைச்சர் மாண்பும்கு ஃபாமி ஃபட்சில் அவர்களுக்கு மலேசிய இந்து சங்கம் தனது நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
www.myvelicham.com Face book / Tik tok /