அதிக வரி விதிப்பு ஆசியான் நாடுகள்  நிராகரிக்கும் என்றார் டத்தோஸ்ரீ அன்வார் இப்றாஹிம்.

ASEAN countries would reject higher tariffs Datuk Seri Anwar Ibrahim.

அதிக வரி விதிப்பு ஆசியான் நாடுகள்  நிராகரிக்கும் என்றார் டத்தோஸ்ரீ அன்வார் இப்றாஹிம்.

Date :18 April 2025 News By :RM Chandran 

 ஒருதலைப்பட்சமாக விதிக்கப்படும் எந்தவொரு வரிவிதிப்புகளையும் ஆசியான் நிராகரிப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும்  உறுதிப்படுத்தினார், 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள  புதிய வரிவிதிப்பை பற்றி தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவுடன் விவாதிக்க வாய்ப்பு கிடைத்ததை குறிப்பிட்டார். "நாங்கள் ஒரு  ஒருமித்த கருத்தை உருவாக்கியுள்ளோம். ஆசியான் சுதந்திர வர்த்தகம் மற்றும் பன்முகத்தன்மையை ஆதரிக்கிறோம்.

பலதரப்பு கொள்கைகளுக்கு முரணாக இருப்பதால், எந்தவொரு ஒருதலைப்பட்ச வரி விதிப்பையும் நாங்கள் ஏற்கவில்லை என்ற நிலைப்பாட்டை  எடுக்கிறோம்," என்று  செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் ஆசியான் தலைவர்கள், பலதரப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி அமெரிக்காவுடன் உரையாடலில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாக அன்வார் தெரிவித்தார்.

ஏப்ரல் 3 ஆம் தேதி, டிரம்ப் நிர்வாகம் அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 10% வரியை அமல்படுத்தியது.

ஆசியானின்  உறுப்பு நாடுகள் வரிகளால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கம்போடியா 49%, லாவோஸ் (48%), வியட்நாம் 46%, மியான்மர் 44%, தாய்லாந்து 36%, இந்தோனேசியா  32%, புருணை  மற்றும் மலேசியா தலா 24%, பிலிப்பைன்ஸ் 17%, சிங்கப்பூர் 10% விழுக்காடு அடிப்படை வரியை எதிர்கொள்வாதாகவும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Thank you fmt