டப்ளின் தோட்ட பாலர் பள்ளிக்கு உதவி முன்னாள் பாட்டாளி சங்கத்தின் ராஜமாணிக்கம் கருப்பையா தெரிவித்தார்.
Assistant to Dublin Garden Preschool Rajamanickam Karuppiah of the Ex-Pattali Sangam.
Date :18 Feb 2025 RM Chandran
டப்ளின் தோட்டத் முன்னாள் பாட்டாளி சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய வகை டப்ளின் தோட்டத்தமிழ்ப்பள்ளி பிரிவு 5 பாலர் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பள்ளிச்சீருடை, புத்தகப்பை, பள்ளி உபகரணங்களை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்ததாக இயக்கத்தின் செயலவை உறுப்பினரும் பட்டர்வொர்த் மண்டின் முன்னாள் தலைமையா சிரியருமான ராஜமாணிக்கம் கருப்பையா தெரிவித்தார்
.
ஒவ்வொரு ஆண்டும் பாலர் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து வகையிலான உதவிகளை செய்து வருகிறது. குழந்தைகள் அருகிலுள்ள தாமான்களிலிருந்தும் மஹாங்கிலிருந்தும் வருகிறார்கள் என்றும்,
பிரிவு 5 உள்ள தமிழ்ப் பள்ளியும் பாலர் பள்ளியும் பிரதான வீதியை ஒட்டிய முக்கியமான இடத்தில் அமைந்திருப்பதால், இந்தப் பள்ளியையும், பாலர் பள்ளியையும் காப்பாற்ற எண்ணுகிறோம். சமீபத்தில் பாலர் பள்ளிக்கு அடுத்துள்ள ராமர் மற்றும் முனியாண்டி கோவில்கள் இரண்டையும் புதுப்பித்ததை குறிப்பிட்டார் ரமேஸ்.
ஜேபிஎன் கீழ் பாலர் பள்ளி பதிவு செய்யப்படாமல் இருப்பதால், நிதிகள் வழங்க ஆதரவளிக்க முடிவு செய்தோம். கடந்த 31 ஆகஸ்ட் 2024 ஆம் நாள் 'Evening of Eligans' ஏற்பாடு செய்து, நிதி திரட்டியதாக தெரிவித்த ரமேஸ் ,
பாலர் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்த நிலையில் 50.00 வெள்ளிக்கான விருந்து அழைப்பிதழை வாங்கிய ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.
சிலர் 500.00 வெள்ளிக்கு அழைப்பிதழை வாங்கியுள்ளனர், மேலும் சிலர் தகுதியானவர்களுக்கு அழைப்பிதழ் அட்டைகளை வாங்கி ஒத்துழைப்பும் வழங்கியுள்ளனர்.
என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர் தலைவர் ராஜமாணிக்கம் கருப்பையா, செயற்கு உறுப்பினர் திரு ராஜமாணிக்கம் அவர்களுக்கும் நிகழ்வுக்கு வருகை தந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் நன்கொடையாளர்கள்
அனைவருக்கும் தேசிய வகை டப்ளின் தோட்டத்தமிழ்ப்பள்ளி பிரிவு 5 தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் திரு ரமேஷ் வீராசாமி, மேல் விவரங்களை பெற திரு. ரமேஸ் வீராசாமி 016- 5555923