விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமித் தாயை தொட்டு மகிழ்ந்தார்
Astronaut Sunita Williams touches Mother Earth
Date :20 March 2025 News By:Punithachandran
இரவு பகல் காணாது, நாளும் கிழமையும் தெரியாது,
பாசங்களைப் பாராது, உடல்நிலை கருதாது,கடமையாற்றிய
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமித் தாயை தொட்டு மகிழ்ந்தார்.
ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகப் பணியாளரான புட்ச் வில்மோர் ஸ்பேஸ் கிராஃட் ஸ்டார் லைனர் மூலம் நாசா சார்பில் கடந்த 5.6.1924 அன்று சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கு ஆய்வு நடத்திவிட்டு ஜுன் 14 தேதி பூமிக்குத் திரும்பும் வகையில் நாசா திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இவர்கள் பயணித்த ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் காரணமாக, இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, தங்களது வெளிப்புறத்தில் 2000 டிகிரியின் சுட்டெரிக்கும் வெப்ப மண்டலத்திற்குள் இருந்த விண்கலத்தில், எந்தவித புவிஈர்ப்பும், போதுமான இதர அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அவர்கள் இந்த 9 மாதங்கள் தங்கியிருந்தது உலக சாதனையாக கருதப்படுகின்றது.
பல்வேறு இடையூறுகள் மற்றும் தாமதங்களுக்கு பிறகு, அவர்களை தகுந்த பாதுகாப்போடு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் விண்கலம் மூலம் நேற்று காலை இந்திய நேரப்படி 10.35 மணிக்கு தாய்க் கோளை நோக்கியப் பயணத்தை சுனிதா, அவரது சகப் பணியாளர் புட்ச் வில்மோர் மற்றும் இரு விண்வெளி வீரர்களுடன் பயணத்தைத் தொடங்கினார். அவர்கள் பயணித்த விண்கலம் மணிக்கு 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் புறப்பட்ட விண்கலம், நேற்று அதிகாலை இந்திய நேரப்படி 3.27க்கு ப்ளோரிடாவின் கடற்பரப்பில் தரையிறங்கியது. கடலில் விழுந்த டிராகன் கேப்சூல் விண்கலத்தை படகு மூலம் மீட்டு, அதிலிருந்த விண்வெளி வீரர்கள் அனைவரையும் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
விண்வெளியில 9 மாதம் 13 நாட்கள் தங்கியிருந்ததால், அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டிருக்கும். குறிப்பாக, அவர்களின் எலும்புகள், தசை நார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களால் எழுந்து நடக்க முடியாது. இப்பொழுது இவர்கள் மருத்துவர்களின் முழுப் பாதுகாப்பில் இருப்பார்கள். 3 முதல் 12 மாதங்கள் பிறகே சுனிதாவும் மற்றவர்களும் இயல்பு நிரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.