இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கல்வியில் உயர்வதற்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்.
Awareness seminar for secondary school going students to improve their education.
Date : 26 March 2025 News By:Segaran Skudai
இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கல்வியில் உயர்வதற்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்.
இடைநிலைப் பள்ளி மாணவர்கள் எவ்வாறு தங்களை தயார்ப்படுத்திக் கொள்வது என்ற கருப்பொருளில், ஒரு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கடந்த 22.3.2025 ஆம் நாள் தாமான் யுனிவர்சிட்டி பொது மண்டபத்தில், மஇகா ஸ்கண்டார் புத்ரி தொகுதி, ஜோகூர் பாரு நற்பணி சங்கம் மற்றும் பக்தி ஜெயா சமூக நல இயக்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்றது.
இடைநிலைப்பள்ளிகளுக்கு அடியெடுத்து வைத்துள்ள மாணவர்கள் அங்குள்ள சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு துணிவுடன் சவால்களை எதிர்கொள்ள வேண்டுமென்று மஇகா ஸ்கண்டார் புத்ரி தொகுதித் தலைவர் திரு. வி. சங்கரபாண்டியன் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ஆசிரியர் திரு. குமரன் தலைமையிலான ஆசிரியர் குழு மாணவர்களுக்கு, தேசிய மொழி, அறிவியல் பாடங்களை எளிய முறையில் எவ்வாறு புரிந்துக் கொள்வது என்பதுக் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். .
இக்கருத்தரங்களில் ஜோகூர் மாநிலத் தலைவர் மாண்புமிகு கே இரவீன்குமார், சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள இயக்கங்கள், சங்கங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
www.myvelicham.com / Face book / you tube/