பாரிட் ராஜா சட்டமன்றத் தொகுதியில் (JOJ) ஜெலாஜா ஓராங் ஜோகூர் திறப்பு விழா கண்டது
Barit Raja Assembly Constituency (JOJ) saw the opening ceremony of Jelajah Orang Johor
Date :23 April 2025 News By;Rm Chandran
பாரிட் ராஜா சட்டமன்றத் தொகுதியில் (JOJ) ஜெலாஜா ஓராங் ஜோகூர் திறப்பு விழா கண்டது ஜோகூர் மந்திரி புசார் தொடக்கி வைத்தார்
இன்று பத்து பகாட்டில் உள்ள புரா கென்சானா கிளப் ஹவுசில் நடைபெற்ற, பாராட் ராஜா மாநில சட்டமன்ற ரீதியில், JOJ எனும் ஜெலஜா ஓராங் ஜோகூர் என்ற தொடக்க விழா, ஜோகூர் மந்திரி புசார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தொகுதியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்ட முயற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் வழி, ஜோகூர் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதன்வழி, மாநிலத் தலைவர்களை உள்ளூர் சமூகத்துடன் ஒன்றிணைப்பதற்கு இது வழிவகுக்கிறது
வேளாண்மை சார்ந்த தொழில்கள் மற்றும் கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜோகூரியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மாநில அரசின் நோக்கத்திற்கு ஏற்ப, பல்வேறு அரசாங்க சலுகைகள் வழங்கப்பட்டவை அனைத்தும் ஓர் உற்சாகமான தொடக்க விழாவாக தாம் கண்டதாக மந்திரி புசார் கூறினார்.
ஜோகூர் மக்களின் சுற்றுப் பயணத் திட்டம் அனைத்து மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் செயல்படுத்தப்படும். இது உள்ளூர் சமூகத்தினரின் ஈடுபாடு மிகவும் அவசியமாகும் என்று தெரிவித்த ஜோகூர் மந்திரி புசார் அவரகள், இந்த பொருள் பொதிந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைத்துத் தரப்பினருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
www.myvelicham.com Face book