சுவாமி விவேகானந்தர் 162 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  இரத்த  தான முகாம் 2025.

Blood donation camp on the occasion of 162nd birth anniversary of Swami Vivekananda 2025.

சுவாமி விவேகானந்தர் 162 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  இரத்த  தான முகாம் 2025.
சுவாமி விவேகானந்தர் 162 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  இரத்த  தான முகாம் 2025.

04 Feb 2025 RM Chandran 

மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் பேரவை, சுவாமி விவேகானந்தர் 162 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  இரத்த தான முகாம் 2025  ஏற்பாடு செய்துள்ளது.

எதிர் வரும் 16-2-2025 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மைடின் பேரங்காடி முத்தியாரா ரினி, ஸ்கூடாய் ஜொகூரில் நடைபெறவுள்ளது.(Maidin Mall  Mutiara Rini, Skudai Johor)

இந்த  இரத்தான முகாமில்  பொது மக்கள்  கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். நீங்கள் வழங்கவுள்ள இரத்தானம் மனித உயிர்களை காப்பாற்ற உதவுகிறது.

பல ஜீவன்கள் மனிதர்களின் கருணையால்  இங்கு வாழ்கின்றன.  நாம் இரக்க குணம் படைத்தவர்கள் என்பதற்கு இது போன்ற தானங்களே  சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

 சுவாமி விவேகானந்தர் இது போன்ற தானங்களை அதிகமாக விரும்புகிறார். அவருடைய திருநாமம் நிலைபெறவே நாம் அனைவரும் துணை நிற்போம்.

மேல் விவரங்களை பெற
திரு. சேகரன் 012-7083252 திரு.செல்வேந்திரன் 017-7110412
எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறவும்.