பிரிக்பீல்க்ஷ் விவேகாந்தா தமிழ்ப்பள்ளியின் நூற்றாம் ஆண்டு விளையாட்டுப் போட்டி

Brickfields Vivekananda Tamil School 100th Annual Sports

பிரிக்பீல்க்ஷ் விவேகாந்தா தமிழ்ப்பள்ளியின் நூற்றாம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
பிரிக்பீல்க்ஷ் விவேகாந்தா தமிழ்ப்பள்ளியின் நூற்றாம் ஆண்டு விளையாட்டுப் போட்டி

News By- Ponangan 29  November2024

 கோலாலம்பூர் பிரிக்பீல்க்ஷ் விவேகாந்தா தமிழ்ப்பள்ளியின் நூற்றாம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள்.

 கோலாலம்பூர்  செராக்ஷ் சுக்கான் போலா செப்பாக் திடலில் சுமார் 450 மாணவர்கள், 400 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், 200 க்கும் மேற்ப்பட்டபொது மக்கள், சிறப்பு பேராதவாளர்கள் புடை சூழ விளையாட்டுப் போட்டிகளை  கண்டு ரசித்தனர்

.

தமிழ்ப்பள்ளியின் 100 ஆண்டு வரலாற்று விளையாட்டு விழாவாக மலர்ந்த இந்த அற்புதமான கண்கொள்ளாக் காட்சி ஏற்பாடுகளை பாராட்டி வாழ்த்தி தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றிய தமிழ்ப்பள்ளிகளின் காவலர் ஓம்ஸ் அவர்கள் அவர் காலத்து 70 - கள் முதல் 2000 ஆண்டுக்கால தமிழர்களின், இந்தியர்களின் ,மலேசியர்களின்  பலத்துறை விளையாட்டாளர்களை  நினைவுக்கூர்ந்து மகிழ்ச்சியை தெரிவுப்படுத்தினார்.

நாட்டின் மையப்பகுதியான செராக்ஷ் நவீன மய காற்பந்து திடலில் மிக சிறப்பாக சொந்த  பொருட் செலவில் இவ்விளையாட்டுப்போட்டிகள் நடந்தது.
 இக்காலத்திலும்  நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் விளையாட்டுப்போட்டிகள்  சொந்த செலவில் நடப்பது வேதனைதான்.

 

ஒற்றுமை அரசின்  விளையாட்டுத்துறை அமைச்சு பள்ளிகளின் விளையாட்டுப்போட்டிகளுக்கு பொருளாதார ஆதரவு கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது என்பதை உணர வேண்டும்.

விவேகாந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர்  திருமதி உதய சுந்தரி, பெ ஆ சங்க தலைவர் திரு. சிவி சங்கர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் கலந்து சிறப்பித்த பிற  இயக்கத்தலைவர்களுக்கும் நன்றி கூறி பாராட்டைத்தெரிவித்த ஓம்ஸ் செந்தமிழ்ச்செல்வர் பரிசுகளை எடுத்து வழங்கி மகிழ்ந்தார்.