Categories
Featured வர்த்தகம்

‘பிரிம்’ தொகையை நிறுத்துதா .! மக்களை தண்டிப்பது போலாகும் டத்தோஸ்ரீ நஜிப்

‘பிரிம்’ தொகையை நிறுத்துதா … மக்களை தண்டிப்பது போலாகும்… டத்தோஸ்ரீ நஜிப்

பிரிம் உதவித் தொகையை அகற்ற முனைவது ஏழ்மை நிலையில் உள்ளவர்களை தண்டிப்பது போலாகும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையிலே ‘பிரிம்’ உதவித் தொகை தொடங்கப்பட்டது.

ஆனால், இந்த உதவித் தொகையை வழங்குவதனால் மக்கள் ‘சோம்பேறிகளாக’ உருவெடுக்க வழிவகுக்கிறது என காரணம் காட்டி  அதனை அகற்ற நினைப்பது வறுமையிலுள்ள மக்களை தண்டிப்பது போலாகும்.

மேலும், பக்காத்தான் ஹராப்பான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் ‘பிரிம்’ உதவித் தொகை தொடரும் என கூறிவிட்டு,  ஆட்சியை பிடித்த பின்னர் மக்களை ஏமாற்ற முனையக்கூடாது என்று டத்தோஸ்ரீ நஜிப் கூறினார்.

Categories
Featured வர்த்தகம்

எஸ்எஸ்டி-க்கு உள்ளடக்கப்படும் பொருட்களின் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும்- சுப்பிரமணியம்

எஸ்எஸ்டி-க்கு உள்ளடக்கப்படும் பொருட்களின் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும்- சுப்பிரமணியம்

கோலாலம்பூர்-

அடுத்த மாதம் அமலாக்கம் செய்யப்படவுள்ள விற்பனை, சேவை வரிக்கு (எஸ்எஸ்டி) உட்படுத்தப்படவுள்ள பொருட்களின் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என சுங்கத்துறை தலைமை இயக்குனர் டத்தோ து. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இன்னும் சில நாட்களில் வரிக்கு உட்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியல் அறிவிக்கப்படும்.
அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் விற்பனை, சேவை வரி அமலாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் சில விதிமுறைகள் காரணமாக இன்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என அவர் சொன்னார்.
இந்த விற்பனை, சேவை வரியின் மூலம் 5 முதல் 10 விழுக்காடு வரை வரி விதிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Categories
Featured வர்த்தகம்

தயாரிப்பு தொழிலில் சாதிக்கவே 3ஆவது தேசிய கார்! -மகாதீர்

தயாரிப்பு தொழிலில் சாதிக்கவே 3ஆவது தேசிய கார்! -மகாதீர்

கோலாலம்பூர், ஆக.24- எவ்வளவு காலம் தான் மலேசியா ஒரு பயனீட்டு நாடாகவே இருப்பது? மலேசியாவும் தயாரிப்பு துறையில் சளைத்த நாடு அல்ல என்பதை நிரூபிக்கும் நோக்கிலேயே, தாம் மூன்றாவது தேசிய கார் தயாரிப்புத் திட்டத்தைப் பரிந்துரை செய்வதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

சீனாவிற்கான தமது அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள மகாதீர், சீனா உலகின் மிகப் பெரிய தயாரிப்பாளர் நாடாக திகழ்வதை தாம் கூர்ந்து நோக்கியதாக, ‘மலேசியா கினி’ உடனான பேட்டியில் கூறினார்.

கடந்த 1985-ஆம் ஆண்டு, நாட்டின் முதல் தேசிய காரை அறிமுகம் செய்த போது, மலேசியாவும், உலகின் மிகப் பெரிய தயாரிப்பு நாடாக பவனி வரும் எண்ணம் கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்பும், அப்போதைய தருணத்தில் சிறப்பாக இருந்தது என்று அவர் விளக்கினார்.

“அந்தத் தருணத்தில், வளர்ந்து வரும் நாடுகளில், மலேசிய மட்டுமே தேசிய காரை தயாரித்து இருந்தது. நீங்கள் வேண்டுமானால், அது குறித்த விவரங்களைத் தேடிப் பாருங்கள்” என்று அவர் சொன்னார்.

“ஆனால், நமக்கு (மலேசியர்களுக்கு) உள்நாட்டு தயாரிப்புகள், மற்றும் பொருட்கள் மீது அதிக நாட்டம் இல்லை. வெளிநாட்டு தயாரிப்புகளை மட்டுமே நாம் விரும்புகிறோம். நுகர்வோர் சமுதாயமாக நாம் தொடர்ந்து நீடித்தால், நாடும் நாமும் என்றுமே ‘பணக்கார’ நாடாக வலம் வர முடியாது” என்று மகாதீர் நினைவுறுத்தினார்.

நவீன மோட்டார் வாகனங்களை தயாரிப்பதில் சில சிக்கல்கள் உண்டு என்பதால், அதனை உணரும் மலேசியாவின் வாகனத் துற, அதனின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தில் தேவையான கவனத்தை செலுத்தும். அதன் வாயிலாக, நாட்டின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

மூன்றாவது தேசிய கார் தயாரிக்கப் படுவதால், நாட்டின் வாகனத்துறையும் பாதுகாக்கப் படும். இதன் வாயிலாக புரோட்டோனின் சரிவும் குறைக்கப் படலாம் என்று அவர் சொன்னார்.

“ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள், தங்களின் வாகனத் துறையை பாதுகாத்து வருகின்றன. சீனா, கொரியா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும், தங்களின் சொந்த தயாரிப்பு கார்களுக்குத் தான் முக்கியத்துவம் வழங்குகின்றன. மலேசியா மட்டுமே அதற்கு விதிவிலக்கு” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Categories
Featured வர்த்தகம்

ஜி.எஸ்.டி.-யை அகற்றியும் பொருள் விலை குறையாதது ஏன்? -லிம் குவான்

ஜி.எஸ்.டி.-யை அகற்றியும் பொருள் விலை குறையாதது ஏன்? -லிம் குவான்

      உலகளாவிய மற்றும் சப்ளைகளின் அடிப்படையில் அவ்விரு பொருட்களின் தேவைகள் அதிகமாக இருப்பதால், அவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி எனப்படும் பொருள் சேவை வரி அகற்றப் பட்ட போதிலும், அரிசி மற்றும் சீனி போன்ற அடிப்படை பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.

அரிசி மற்றும் சீனியை விநியோகம் செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள், விநியோகத் தந்திரங்களை பயன்படுத்தி அந்தப் பொருட்களை தங்களிடம் வைத்துக் கொள்கின்றன.

ஜி.எஸ்.டி அகற்றப் பட்டு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதற்கொண்டு, எஸ்.எஸ்.டி எனப்படும் விற்பனை சேவை வரி அமலுக்கு வரவிருக்கிறது.

இருந்த போதிலும், பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாததால், அதன் காரணம் குறித்து விரிவான ஆய்வை நிதியமைச்சு மேற்கொள்ளவிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

அந்த ஆய்வு நடைபெறுவதற்கு முன்னர், உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் அமைச்சு சீனியின் புதிய விலையை அறிவிக்கவுள்ளது என்று அவர் கூறினார்.

 

Categories
வர்த்தகம்

இறக்குமதி இறால்களால் வந்த வினை!

இறக்குமதி இறால்களால் வந்த வினை

!

மலேசியாவின் மிகவும் மலிவான விலையில் விற்கப்பட்ட ‘ஊடாங் காலா’ எனப்படும் இறால்களை உண்டதால் அரிப்பு, உடல் வீக்கம் மூக்கு வீக்கம், கண்களில் நீர்வழிதல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக வெளிவந்த தகவலைத் தொடர்ந்து, மலேசிய சுகாதார அமைச்சு, நாட்டின் அனைத்து எல்லைகளின் வழி கொண்டுவரப்படும் உணவு வகைகள் மீது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்!

Categories
Featured வர்த்தகம்

ரிம.18 பில்லியன் ஜிஎஸ்டி பணம் காணாமல் போக வாய்ப்பில்லை- இர்வான்

ரிம.18 பில்லியன் ஜிஎஸ்டி பணம் காணாமல் போக வாய்ப்பில்லை- இர்வான்

கோலாலம்பூர், ஆகஸ்ட்.9- ஜிஎஸ்டி வரிப் பணம் காணாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் ஒருங்கிணைங்கப்பட்ட நிதியில் சேர்க்கப்பட்டுவிட்டதாக தேமு ஆட்சியின்போது நிதி அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த டான்ஸ்ரீ இர்வான் செரிகார் தெரிவித்தார்.

எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது, எவ்வளவு பணம் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியில் சேர்க்கப்பட்டது என்பதற்கெல்லாம் கணக்கு இருப்பதாகவும், அதன் கணக்கறிக்கை நாடாளுமன்றத்தில் ஒவ்வோராண்டும் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த தகவல்களை தேசிய கணக்காய்வுத் துறையிலிருந்தும் நிதி அமைச்சின் நிதி நிர்வகிப்புப் பிரிவில் இருந்து பெறலாம் என இர்வான் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி வரிப் பணத்திலிருந்து ரிம.18 பில்லியன் பணம், முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியிருப்பதை மறுத்து இர்வான் இவ்வாறு விளக்கமளித்தார். இது குறித்து லிம் குவான் எங்கிற்கு எதிராக போலீசில் புகார் செய்வீர்களா என கேட்டதற்கு, தனக்கு அவ்வாறான திட்டமேதும் இல்லையென இர்வான் பதிலளித்தார்.

Categories
Featured உலகம் வர்த்தகம்

உலக தமிழ் வர்த்தக சங்கத்தின்  ஏற்பாட்டில் கோலாலம்பூரில் முதலீட்டாளர், தொழில் முனைவோர் மாநாடு….

கணபதி 26 ஜூலை 2018

உலக தமிழ் வர்த்தக சங்கத்தின்  ஏற்பாட்டில் கோலாலம்பூரில் முதலீட்டாளர், தொழில் முனைவோர் மாநாடு.

உலக முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து வர்த்தக ரீதியில் உறவு பாலத்தை அமைத்து கொடுக்கும் உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் முதலீட்டாளர், தொழில் முனைவோர் மாநாடு. நடைபெறவுள்ளது என்று அதன் தலைவர் ஜெ.செல்வக்குமார் கூறினார்.

பல்வேறு நாடுகளில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் மலேசிய பொருட்கள் அயலகத்திற்கு ஏற்றுமதி செய்யவும் மலேசியாவிற்கு தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்யவும் வழி அமைத்து கொடுப்பது தாம் இந்த மாநாட்டில் முதன்மை நோக்கமாகும்.தனியார் நிறுவன்ங்கள்  அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு பாதுகாப்பான தொழில் செய்வதெனவும் புதிய தொழில்நுட்பத்தில் போட்டியில்லா தொழில் முனை செய்வது எப்படி? போன்றவை இம்மாநாட்டில் பேசப்படும்.

 

இம்மாநாட்டில் 20 நாடுகளில் உள்ள வர்த்தக அமைப்புகளில் இருந்து 500 அதிகமானோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். தொழில் பூங்கா, சுற்றுலா வீடுதிகள், உணவு பதப்படுத்தும் தொழில்,தனியார் விமான் நிலையங்கள் சொகுசு கப்பல், போக்குவரத்து, நீர் விளையாட்டு, நீர் நிலைகள் மீது சோலார் மின் உற்பத்தி, மின்சாரத்தில் இயங்கும் சிறிய வகை இரண்டு,நான்கு சக்கர வாகன்ங்கள் போன்ற தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் ஏற்படுத்தவுள்ளது.

மலேசியாவிற்கு உற்பத்தி ஆகாத பொருட்களுக்கு குறிப்பாக உணவகங்களுக்கு தேவையான பொருட்களை கூட்டுறவு சங்கங்கள்  மூலம் இறக்குமதி செய்வதால் இங்குள்ள பல உணவகங்கள் பயனடையும் என்பது திண்ணம் என்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பேசிய  அமைப்பின்  தலைவர் ஜெ.செல்வகுமார் கூறினார்

இவ்வாண்டு இறுதிக்குள் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தொழில்துறை அமைச்சர் சாஜாகாண்.சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஸ்ணராவ் உட்பட தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அதோடு மலேசிய மத்திய அரசாங்கம் உதவியுடன் பல்வேறு தனியார் தொழில் நிறுவன்ங்கள்,தொழில் வர்த்தக அமைப்புகள் ஒப்பந்தம் செயவுள்ளன. இம்மாநாட்டிற்கு நுழைவு இலவசம். கலந்து கொள்ள விருப்புவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.அது குறித்த தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும். இந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்ட்த்தில் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கந்தின் தலைவர் முத்துசாமி திருமேனி, சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் எல்.செகரன்.மலேசிய பணப் பரிமாற்று சங்கத்தின் தலைவர் டாக்டர் ஹஜி முகமட் சுய்பு மற்றும் ஏரா பெருமாள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

Categories
Featured Penang மாநிலம் வர்த்தகம்

ரிம. 940 கோடி எரிவாய் குழாய் திட்டத்தில் ஊழலா? …..நிதியமைச்சர் லிம்

ரிம. 940 கோடி எரிவாய் குழாய் திட்டத்தில் ஊழலா? …. நிதியமைச்சர் லிம்

கோலாலம்பூர், ஜூன் 5 – சுமார் 940 கோடி ரிங்கிட் மதிப்பிலான இரண்டு எரிவாயு குழாய்த் திட்டங்களுக்கான 88 விழுக்காடு பணம் எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் 13 விழுக்காடு மட்டுமே பணிபூர்த்தி ஆகியிருக்கிறது என நிதியமைச்சு கண்டுபிடித்திருக்கிறது என அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

நிதியமைச்சில் எவருக்கும் எட்டாத வகையில், யார் கண்ணிலும் படாத வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிவப்பு கோப்புகளில் இந்த விபரத்தை அம்பலப்படுத்தி உள்ளது என்றார் அவர்.

நிதியமைச்சின் சூர்யா ஸ்ட்ராட்டெஜிக் எனர்ஜி ரிசோர்ஸ் சென். பெர்ஹாட் என்ற நிறுவன இந்தத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
நிதி முறைகேட்டில் சிக்கியுள்ள 1எம்டிபியின் கீழ் நிறுவனமான எஸ்.ஆர்.சி.யின் துணை நிறுவனம்தான் இந்த சூர்யா ஸ்ட்ராட்டெஜிக் நிறுவனம் என்றும் அமைச்சின் அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக லிம் சொன்னார்.

நிதியமைச்சின் துணை நிறுவனமாக சூர்யா நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. எம்பிபி எனப்படும் மல்டி புரொக்ட் பைப்லைன் மற்றும் டிரான்ஸ்-சபா கியாஸ் பைப்லைன் எனப்படும் இரு திட்டங்களை இது மேற்கொள்ள 2016 ஆம் ஆண்டு ஜூலையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மலாக்கா- போர்ட்டிக்சனை ஜித்ராவுடன் இணைக்கும் 600 கிலோ மீட்டர் பைப்லைன் திட்டம்தான் எம்பிபி திட்டமாகும். மற்றொரு திட்டம் 662 கிலோ மீட்டர் தொலைவு எரிவாயு குழாய் அமைக்கும் திட்டமாகும்.

Categories
Featured Selangor மாநிலம் வர்த்தகம்

இன்று முதல் கறுப்புப் பட்டியல்: 2,65,000 பேருக்கு இனி ‘விடுதலை’

இன்று முதல் PTPTN கறுப்புப் பட்டியல்: 2,65,000 பேருக்கு இனி ‘விடுதலை’

கோலாலம்பூர், ஜூன்.5- உயர்கல்வியை தொடர்வதற்காக பி.டி.பி.டி.என் கல்விக் உதவித் தொகையைப் பெற்று, அதனைத் திருப்பி செலுத்தாத 4 லட்சத்து 33 ஆயிரத்து 708 பேரின் பெயர்களை குடிநுழைவு துறை கருப்பு பட்டியலிட்டிருந்தது. அந்தக் கருப்பு பட்டியலிருந்து 2 லட்சத்து 65 ஆயிரம் பேரின் பெயர்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ள 1 லட்சத்து 68 ஆயிரத்து 289 பேரின் பெயர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதியன்று, அந்தக் கருப்பு பட்டியலிருந்து விடுவிக்கப் படும் என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

வெளிநாடுகளுக்கான பயணத்தைத் தடுக்கும் வண்ணம், பி.டி.பி.டி.என் கடன் பெற்றவர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலிடப் பட்டன. அந்தப் பட்டியலிருந்து அவர்களின் பெயர்களை புதிய அரசாங்கம் அகற்றி வருகின்றது.

இதனிடையில், அந்தக் கருப்பு பட்டியலில் தொடர்ந்து நீடித்திருக்கும் நபர்கள், வெளிநாட்டிற்கு பயணத்தை மேற்கொள்ள முடியாது என்று மொகிடின் தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து, நாடு தழுவிய நிலையில் உள்ள குடிநுழைவு துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு வருவாய் வாரியத்தால் கருப்பு பட்டியலிடப் பட்டவர்கள், ஜூன் 1-ஆம் தேதிக்கு மேல், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம் என்று விளக்கமளித்தார்.

இதர ஏஜென்சிகளால், 6 லட்சத்து 36,202 மலேசியர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதை தடுக்கும் கருப்பு பட்டியலிடப் பட்டுள்ளனர் என்ற தகவலை மொகிடின் பகிர்ந்துக் கொண்டார்.

Categories
Featured வர்த்தகம்

ஜனவரி முதல் வார பெட்ரோல் விலை ஏற்றம்!….

ஜனவரி முதல் வார பெட்ரோல் விலை ஏற்றம்!

புதிய ஆண்டின் முதல் புதன்கிழமையான இன்று, இவ்வாரத்திற்கான பெட்ரோல் விலை சன்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் வழி, 2018இல் ஒவ்வொரு புதன்கிழமையும் வாராந்திர பெட்ரோல் விலையின் நிர்ணயம் அறிவிக்கப்படும்  என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆண்டின் துவக்கத்திலேயே பெட்ரோல் – டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது.  நாளை வியாழக்கிழமை நள்ளிரவு 12.01 மணி தொடங்கி, ரோன் 95 பெட்ரோல் லீட்டருக்கு வெ.2.29க்கும் (சென்ற வாரம் வெ.2.26) , ரோன் 97 பெட்ரோல் லீட்டருக்கு வெ. 2.56க்கும் ( சென்ற வாரம் வெ.2.53) விநியோகிக்கப்படும். இவை முறையே லீட்டருக்கு 3 சென் வீதம் ஏற்றம் கண்டுள்ளது.

இம்முறை டீசல் விலை லீட்டருக்கு வெ.2.32க்கு விநியோகிக்கப்படும். சென்ற வாரம் இதன் விலை லீட்டருக்கு வெ.2.26 மட்டுமே. இப்போது 6 சென் ஏற்றம் கண்டுள்ளது. இவ்வாண்டின் இந்த முதலாவது பெட்ரோல் விகை அறிவிப்பானது 41ஆவது வாரத்தை எட்டியுள்ளது. வாராந்திர விலை நிர்ணய அமைப்பு முறை, கடந்த மார்ச் மாதம் 2017இல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.