மக்கள் நல்வாழ்வு இயக்கம் தொடக்க விழா !

0
418

மக்கள் நல்வாழ்வு இயக்கம் தொடக்க விழா !
மூன்றுகுடும்பங்களுக்கு 15.000 வெள்ளி இழப்பு நிதி வழங்கப் டுகிறது
சாதனையாளருக்கு பாராட்டு ..IMG-20170908-WA0090

08/09/2017

எதிர் வரும் 9/9/17 சனிக்கிழமை பிற்பகல் மணி 3.00 முதல் இரவு 7 மணிவரை , கோலாலம்பூர் ஜாலான் கூச்சாய் லாமாவில் உள்ள கே லிங்க் மண்டபத்தில் , மலேசிய இந்தியர் மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தொடக்க அறிமுக விழா ,தொழில் அதிபர் டத்தோஸ்ரீ தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்சசியில் மலேசியா இந்தியர் நீதிக் கட்சியின் தேசியத் தலைவர் திரு எஸ்.பி. முருகன்,யாயாசான் கல்வி அறவாரியத் தலைவர் திரு பி,பாண்டியன் , மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் டத்தின் தாமரைச்செல்வி மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரமுகர்களும் வாழ்த்துரை வழங்குவார்கள். மக்கள் நல்வாழ்வு இயக்கத் தலைவர் திரு ரெ .கோ.ராசு இயக்கத்தின் நோக்கமான, எல்லாரும் உடல் நலத்தோடும் பொருளாதார பலத்தோடும் மன மகிழ்ச்சியோடும் வாழ் வேண்டும் மற்றும் இயக்க செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றுவார். கே.லிங்க் நிறுவன இயக்குனர் டத்தோ டேரன் கோ அவர்கள் சிறப்புரை வழங்குவார் !
கே லிங்க் நிறுவனத்தில் மாதம் தோறும் குறிப்பிடட அளவுக்கு தங்களது தேவைக்கு பொருட்களை தொடர்ந்து வாங்கி வருபவர்களுக்கு ,மரணம் நிகழ்கின்ற பட்சத்தில் நிறுவனம் 5000.00 வெள்ளி இழப்பு நிதி வழங்குகிறது .மேலும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் 500 வெள்ளி வழங்குகிறது .
இந்த தொடக்க விழாவில் மூன்று குடும்பங்களுக்கு 15000 வெள்ளி இழப்பு நிதி

வழங்கப் படும்.

IMG-20170908-WA0095
இயக்க உறுப்பினர்களுக்கு பல்வேறு நிலைகளிலும் ஒத்துழைப்பு வழங்கப் படுகிறது.
அடுத்த ஐந்து வருடங்களில் குறைந்த பட்சம் 5000 உறுப்பினர்களை பொருளாதார மேம்பாடு காண ஊக்குவிப்பு வழங்கப்படும் .
தனிமனித வெற்றியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை பாராட்டி ,மேலும் ஊக்கப் படுத்தும் நோக்கத்தையும் இயக்கம் கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் ,அண்மையில் எட்டே வினாடிகளில் செண்டோல் தயாரித்து சாதனை புரிந்து வரும் இளைஞர் பாங்கி திரு குமார் அவர்களுக்கு இந்த தொடக்க விழாவில் சிறப்பு செய்யப் படும்.
இரவு உணவோடும் ,திரு குமார் அவர்களின் சுவையான சென்டோலோடும் இனிதே நடைபெற விருக்கும் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 016 3113016 தொடர்பு கொண்டு உங்களின் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமாய் மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் செயலாளர் முனைவர் இரா. இலட்சபிரபு PhD அவர்கள் கேட்டுக் கொள்கிறார்

Your Comments