திட்டங்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். டத்தோஸ்ரீ எம். சரவணன்

By Election Air Kuning Plans should be announced in advance. Datuk Seri M. Saravanan

திட்டங்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். டத்தோஸ்ரீ எம். சரவணன்

Date :14 April 2025 News by:PunithaiPerumal 

தாப்பா வாக்காளர்கள் ஓரங்கட்டப்படுவதாக நினைக்க வேண்டாம்
திட்டங்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
டத்தோஸ்ரீ எம். சரவணன் நினைவுறுத்து

தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் முன்கூட்டிய அறிவிக்கப்பட்டால்தான், ஒற்றுமை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவைப் பிரதிநிதித்துவத்தை தொகுதி மக்களால் உணர முடியும். எப்பொதுமே

 
தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால் மட்டுமே, ஒற்றுமை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் மக்களால் உணர முடியும் என்றும், தொகுதியின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு ஒதுக்கீடு 6.13 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும், தாப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எ. சரவணன் FMT செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 

ஒதுக்கீடு கிடைப்பதற்கு தாமதப்படுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும்கூட, மக்கள் புகார்களை எழுப்புவதால், ஒற்றுமை அரசாங்கத்தின் கட்சிகளுக்கிடையே இதுபோன்ற நிலமைகள் உருவாகின்றன. 
 
ஆயர் கூனிங் இடைத்தேர்தலுக்கான வேட்பாமனுத் தாக்கல் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்பதாகவே, பொதுக் கழிப்பறைகள், உணவு ஸ்டால்கள், சமூக மண்டபங்கள் மற்றும் LED விளக்குப் பொருத்துதல் போன்ற 33 திட்டங்களை ங்கா தாப்பா தொகுதிக்காக ங்கா அறிவித்திருந்தார். 

ஆனால் இந்த அறிவிப்பினை பிஎஸ்ஏம்மின் வேட்பாளர் பவானி கே.எஸ். உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்தனர். இதுபோன்ற ஒதுக்கீடுகள் வேறொரு நேரத்தில், அதாவது முன்பதாகவே தெரிவித்திருக்க வேண்டும் என்றும், தேர்தல் பிரச்சாரத்தின் நெருக்கமான நேரத்தில் அத்தகைய அறிவிப்பு செய்வது லஞ்சத்திற்கும் சமம் என்று கூறினர்.
.
என்றாலும், கேனிங் சட்டமன்ற உறுப்பினர் ஜென்னி சோய் இந்தக் கூற்றை நிராகரித்தார். அவர் கூறுகையில், ஆயர் கூனிங் தொகுதியின் இடம் காலியாகுவதற்கு முன்பதாகவே, ங்கா இந்த ஒதுக்கீட்டினை அறிவித்திருந்தார். ஆனால், மஇகா துணைத் தலைவர் ஒற்றுமை அரசாங்கத்தினை ஆதரிப்பதால், தமது தொகுதி மக்களின் வளர்ச்சி மற்றும் உள்பட்டமைப்பு ஒதுக்கீடுகள் விரைவாக கிடைக்கப் பெற வேண்டுமென்று விரும்புகிறார் என்றார்.  

எது எவ்வாறாக இருப்பினும், தேசிய முன்னணி வைத்திருக்கும் தொகுதிகளில், ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதாக மக்கள் கருதுகின்றனர்.

Thank you FMT 

www.myvelicham.com / Face book / Tik Tok /Intg/ Google