தமிழ் இயக்குனரின் பாலியல் தொல்லை: அம்பலமாக்குவேன்! -நடிகை ஸ்ரீரெட்டி!

0
114

தமிழ் இயக்குனரின் பாலியல் தொல்லை: அம்பலமாக்குவேன்! -நடிகை ஸ்ரீரெட்டி!

 தமிழ்ப்பட இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சைக்குரிய ‘அம்பலம் புகழ்’ தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் பட வாய்ப்புக் கோரும் நடிகைகளை உல்லாசத்திற்கு அழைக்கும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது என்று துணிச்சலாக தெரிவித்தவர் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.

மேலும் தெலுங்கு திரையுலகப் பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் செய்த லீலைகளின் விபரங்களை விளாவாரியாக அம்பலப்படுத்தியவர் அவர்.

நடிகர் ராணாவின் தம்பி அபிராம் தனக்கு படவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி படுக்கையை பகிர்ந்ததாக ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்தார். மேலும், ஆபிராம் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப் படங்களையும் வெளியிட்டார்.

அது போல தமிழ் இயக்குனர் ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தகாக புதுக் குண்டை தூக்கி போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. அந்த இயக்குனர் யார் என்று விபரத்தை விரைவில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

யார் மீது குற்றம் சுமத்தினாலும் அதற்கான ஆதாரங்களையும் ஶ்ரீரெட்டி சேர்த்து வெளியிடுவார். அந்தத் தமிழ் இயக்குனர் யாராக இருக்கும் என்று ஆளாளுக்கு யூகிக்கத் துவங்கிவிட்டனர்.

தனக்கு நடந்த அந்த ஒரு சம்பவத்தை தவிர்த்து தமிழ் சினிமா, பெண்களை மரியாதையுடன் நடத்துவதாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். ‘நான் விரைவில் தமிழ்ப் படத்தில் நடிப்பேன்’ என்கிறார் ஸ்ரீரெட்டி.

Your Comments