தெளிவான மன நிலை,நிதானம், மௌனம் இவை மூன்றும் வாழ்க்கையில் நமக்கு தேவை..
Clear mind, poise, Silence We need all three things in life Dato Seri Mohanambam Subramaniam
Date :07 Feb 2025 News By : RM Chandran
முருகனின் அருள் , ஆசீர்வாதம் பெறும் போது வாழ்க்கையில் தைரியம் இருக்கும் என்றார் டத்தின்ஸ்ரீ மோகனம்பாள்
சுப்ரமணியம்.
வணக்கம் நான், டத்தின்ஸ்ரீ மோகனம்பாள் சுப்ரமணியம் பேசுகிறேன்.வெளிச்சம் டிவிக்கும் பொது மக்களுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆறுபடை முருகனுக்கு மகா கும்பாபிஷேகம் மிகவும் கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். பக்தர்கள் திரளாகப் படை எடுத்து இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சந்தோசமான தருணத்தில் நாம் பிரார்த்தனை செய்து அவரிடம் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுமென வேண்டிக் கொண்டு இருக்கிறோம். நானும் எனது பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டுமென கேட்டுக்கொண்டு வந்துள்ளேன். நமது வாழ்க்கையில் நமக்கு தேவையான விஷயம் இரண்டு.
ஒன்று நமது கடன் தொல்லைகள் தீர வேண்டும், இன்னொன்று நமது எதிரிகள் தொல்லை தீர வேண்டும் இதுவெல்லாம் தீர்க்க வேண்டுமானல் முருகனிடம் இந்த இரண்டு விஷயங்களை நிறைவேற வேண்டுமென வேண்டிக்
கேட்டுக்கொள்வோம்.
எதையும் தாங்கும் இதயம், தெளிவான மன நிலை,நிதானம்,
மௌனம் இவை மூன்றும் வாழ்க்கையில் நமக்கு தேவையான ஒன்று. அதை பெறவே நானும் இங்கு வந்துள்ளேன்.
ஆலயத்தலைவர்,தலைவி, ஆலய நிர்வாக குழுமம் மற்றும் குருக்கள் ஐயா, எனது அலுவலகத்திற்கு நேரில் வந்து முறைப்படி அழைப்பு விடுத்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அன்பும் பண்பும் இனி வளர வேண்டும்,மலர வேண்டும் என்று ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.
'சுக்குக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை, சுப்ரமணியத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை' என்று பொதுவாக எல்லோரும் சொல்வோம்.
இன்னும் வரக்கூடிய இளைய தலைமுறையினர்கள் தங்களை சமய நடவடிக்கையில் (Spiritually activities) இது போன்ற நடவடிக்கைகளுக்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு இந்த தருணத்தில தாழ்மையுடன் கேட்டுக்
கொள்கிறேன்.
அப்போதுதான் அவர்கள் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். சிறப்பாக திருவிழா காணும் ஆறு படையரின் ஆசீர்வாதம் அருள் பெற்று நாம் அனைவரும் செல்வோம். 'வேல் உண்டு வினை இல்லை, மயிலுண்டு பயமில்லை ' இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க என்று கூறிய, டத்தின்ஸ்ரீ மோகனாம்பாள் அவர்கள், கடந்த பல வருடங்களாக கோயில்களுக்கும் சமூக இயக்கங்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளையும் தன்னை நாடி வருகின்ற தனி மனிதர்களுக்கும் உதவி கரங்களை நீட்டி வருகிறார்.
இவரை போன்ற சமுதாய பற்றாளர்கள், உணர்வாளர்கள் கருணை உள்ளம் படைத்தவர்கள் மேலும் சமுதாயத்தில் உருவாக வேண்டும் என்று மை வெளிச்சம் பெரிதும் எதிர் பார்க்கிறது.