"பூமியில் புதிய புரட்சி" குறித்த மாநாட்டை விரைவில் நடத்த திட்டம்
Conference on "New Revolution on Earth" to be held soon Plan to Hold

Date :10 March 2025 News By: Rajen ipoh
மலேசியா,ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம்
முத்தமிழுக்கு அப்பால் அறிவியல் தமிழை கையிலேந்தி
செயற்கை நுண்ணறிவு (AI) Artificial intelligence
"பூமியில் புதிய புரட்சி" குறித்த மாநாட்டை விரைவில்
நடத்த திட்டம் வகுத்து பூர்வாங்க பணிகள் தொடங்கிய நிலையில், ஆய்வாளர்களிடம் இருந்து (AI) தொடர்பான கட்டுரைகளை பெரிதும் எதிர்ப்பார்க்கின்றோம்.
இந்த மாநாடு தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் கட்டுரைகள் அமைய வேண்டும்,
மாநாட்டில் செயற்கை நுண்ணறிவுக் கட்டுரைகள் தொகுப்பு
நூலாக வெளியீடு செய்வதற்கும், சிறந்த கட்டுரைக்கு ரொக்க பரிசும் வழங்கப் பெறும். கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரையில் தன்குறிப்பும், unicode எழுத்துருவில் 5 பக்கங்கள் மிகாமல் கணினி வழித் தட்டச்சு செய்து 30/3/2025 தேதிக்குள் arumugamkannan6161@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கட்டுரையாளர்களுக்கு தொகுப்பு நூலும், சான்றிதழும் இலவசமாக வழங்கப் பெறும்.
கவிரத்னா டாக்டர்
அருள் ஆறுமுகம் கண்ணன் PJK, BPP, PJPN
HP- 012-5006161