மலேசிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பட்டமளிப்பு விழா 2025

Convocation of Malaysian Tamil Literary Association 2025

மலேசிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பட்டமளிப்பு விழா 2025

03 April 2025 News By;Maniventhan 

மலேசிய தமிழ் இலக்கிய கழகத்தின் பட்டமளிப்பு விழா கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தன் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு பிரமுகர்களாக, அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேரசிரியர்  ஜி.இரவி தமிழகத்தின் பேராசிரியர் கரு. முருகனார்,  முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ச. சுப்ரமணியம், மலாயா பல்கலை கழகத்தின் தமிழ் ஆய்வுப் பிரிவின் முன்னாள்  தலைவர்  முனைவர் க.குமரன் ஆகியோர் வருகை புரிந்தனர்.

    தமிழ் நாடு, அழகப்பா பல்கலைக் கழக தொலை நிலைக் கல்வி இயக்கம் வழி, மூன்று ஆண்டுகள் இளங்கலை , இரண்டு ஆண்டுகள் முதுகலை பயிற்றுவித்து,பல பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்த நிகழ்வில், சுமார் எழுபத்தாறு மாணவர்கள் தங்கள் தமிழியல் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
   
 இளமையில் நிறைவேறாத தங்கள் கனவை, இன்று குடும்பப் பெண்களாக கடுமையான சூழ்நிலையில், பல தடைகளைத் தாண்டி, நீண்ட கால கனவை நிஜமாக்கினர். 

இந்நிகழ்ச்சியில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

.www.myvelicham.com