ஆயில் பாம் தமிழ்ப்பள்ளியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா

Convocation of Oil Palm SJKT Tamil School for the year 2024-2025

ஆயில் பாம் தமிழ்ப்பள்ளியின் 2024-2025 ஆம்  ஆண்டிற்கான  பட்டமளிப்பு  விழா

Date : 17 Jan 2025 RM Chandran

ஜொகூர்,கூலாய் ஆயில் பாம் தமிழ்ப்பள்ளியின் 2024-2025 ஆம்  ஆண்டிற்கான பரிசளிப்பு, பட்டமளிப்பு நேர்த்தி நிறை விழா
கடந்த  16-1-2025 ஆம் நாள் வியாழக்கிழமை கம்போங் ஸ்ரீ பாயா பல நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டத்தோ ஜெஜெ. சந்திரன்,குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் தமதுரையில், தமிழ்ப்பள்ளியில் கல்வியை முடித்த மாணவர்கள் இடை நிலைப் பள்ளியிலும்  கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

அங்கு பல் வேறுபட்ட மாணவர்களுக்கு நடுவில் உங்களது போட்டியாற்றல் சோர்ந்து போய் விடக்கூடாது.பள்ளியின் புறப்பாட நடவடிக்கைகள், விளையாட்டுத்துறையில் அதிகம் பங்கெடுத்து சாதனை படைப்பதோடு
தமிழ்மொழிப்பாடத்தையும் கை விடாமல் இருக்க வேண்டும்.

'தமிழ் படித்தால் சோறு போடாது என்ற தவறான  எண்ணத்தை கை விட வேண்டும் பலருக்கு  தமிழ்தான் சோறு போடுகிறது தமிழாற்றால் நிறைந்தவருக்கு இன்று சிறந்த எதிர் காலம் உள்ளது ' என்று கூறிய டத்தோ ஜெஜெ.சந்திரன், 

6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களையும். பரிசுகளையும் எடுத்து வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.