தெலுக் பங்லிமா காராங் ஸ்ரீ பித்தாரா பாலர் பள்ளியின் பட்டமளிப்பு விழா

Convocation of Teluk Panglima Garang Sri Pithara Preschool

தெலுக் பங்லிமா காராங் ஸ்ரீ பித்தாரா பாலர் பள்ளியின் பட்டமளிப்பு விழா
தெலுக் பங்லிமா காராங் ஸ்ரீ பித்தாரா பாலர் பள்ளியின் பட்டமளிப்பு விழா


   மணிவேந்தன் பந்திங் ஜன 21,

பந்திங் தெலுக் பங்லிமா காராங் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ பித்தாரா பாலர் பள்ளியின் பட்டமளிப்பு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது

.

நேற்று  மாலை மணி6.00 அளவில் தெலுக் பங்லிமா காராங் நகரின்  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீபித்தாரா தாய்த்தமிழ் பாலர்பள்ளியின் 2024 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு பரிசளிப்பு விழாவில்  சிலாங்கூர் மாநில மஇகா துணைத்தலைவரும்  கோலலங்காட் மஇகா தொகுதித் தலைவருமான ஸ்ரீதரன் ரெங்கநாதனும், சீஜங்காங் இந்திய சமூகத் தலைவரும் கோலலங்காட் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவருமான முருகன் கலந்து சிறப்பித்தனர்.

 

பெற்றோர்களின் சிறப்பான ஆதரவோடு
இப்பாலர் பள்ளியின் 62 மாணவர்கள் மும்மொழி படைப்புகளை படைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீதரன் மித்ரா நிதியுதவியில் நடைபெறும் இப்பாலர்பள்ளி மாணவர்கள் அனைவரும் தமிழ்ப்பள்ளிக்கே செல்வதை அறிந்து மனமுவந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

 நம் சமுதாயத்தின்  முதன்மைத் தேர்வாக தமிழ்ப்பள்ளி இருக்கவேண்டும் என்றும் தமிழ்மொழியே நமது அடையாளம் என்று தமதுரையில் கூறினார். மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.