Categories
Featured நீதிமன்றம்

அரசு அதிகாரி கற்பழித்து, கொலை: லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!

அரசு அதிகாரி கற்பழித்து, கொலை: லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!

சிபு, ஆக.21- சிபு பகுதியைச் சேர்ந்த பொதுச் சேவை உறுப்பினர் ஒருவரை கற்பழித்து கொலைச் செய்ததாக அதேப் பகுதியைச் சேர்ந்த லோரி ஓட்டுநர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டது.

இம்மாதம் 1-ஆம் தேதி மற்றும் 2-ஆம் தேதியன்று, ஜாலான் தியோங் ஹுவா என்ற பகுதியில் உள்ள அறையில் நூர்னியா அஸாலியா என்ற அந்தப் பெண்ணை, 42 வயதான ஃபிலீப் உஜா என்ற அந்த ஆடவன் கற்பழித்து, பின்னர் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.

அந்த ஆடவன் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள், இபான் மொழியில் அவனுக்கு வாசிக்கப் பட்டது. அவனின் வாக்குமூலம் ஏதும் பதிவுச் செய்யப் படவில்லை. அவன் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.

அந்த ஆடவன் அப்பெண்ணைக் கொலைச் செய்தான் என்று நிரூபிக்கப் பட்டால், குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ், அவனுக்கு கட்டாய மரணத் தண்டனை விதிக்கப் படும்.

அப்பெண்ணை அவன் கற்பழித்துள்ளான் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால், குற்றவியல் சட்டத்தின் 376 (4) பிரிவின் கீழ், அவனுக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் 10 பிரம்படிகள் விதிக்கப் படும்.

கொலைச் செய்யப்பட்ட பெண்ணின் மீது நடத்தப் பட்ட பிரேத பரிசோதனை மற்றும் இரசாயன அறிக்கைகள் இன்னும் வெளியிடப் படாததால், அவ்வழக்கு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது என்று நீதிபதி கரோலீன் பீ அறிவித்தார்.

கொலையுண்ட நூர்னியாவின் உடல், அவர் தங்கியிருந்த அறையில், ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதியன்று, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், அரை நிர்வாண கோலத்தில் அவருடன் பணி புரியும் சக பொதுச் சேவை ஊழியரால் கண்டெடுக்கப் பட்டது.

நூர்னியா வேலைக்குச் செல்லவில்லை என்பதை அறிந்த அவரின் கணவர், நூர்னியாவுடன் வேலைப் பார்க்கும் ஊழியரை தொடர்புக் கொண்டு, தனது மனைவியின் இருப்பிடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

Categories
Featured Wilayah Persekutuan நீதிமன்றம் மாநிலம்

நஜிப் மீது 3 புதிய குற்றச்சாட்டுகள்….

நஜிப் மீது 3 புதிய குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மேலும் 3 புதிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை காலை கோலாலம்பூர் நீதிமன்றம் வந்தடைந்தார். ஏற்கனவே நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நஜிப் மீது கொண்டு வரப்படும் புதிய குற்றச்சாட்டுகள் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட கள்ளப் பண பரிமாற்றம் தொடர்புடையவை ஆகும்.

ஜாலான் டூத்தாவில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) கள்ளப் பண பரிமாற்றம் மற்றும் அம்லா எனப்படும் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் சட்டம் ஆகியவை (Anti-Money Laundering, Anti-Terrorism Financing, and Proceeds of Unlawful Activities Act 2001) தொடர்பில் மேலும் 3 புதிய குற்றச்சாட்டுகளை ஊழல் தடுப்பு ஆணையம் நஜிப் மீது சுமத்தியுள்ளது.

ஏற்கனவே நஜிப் மீதிலான 4 குற்றச்சாட்டுகளைப் போன்றே இந்தப் புதிய குற்றச்சாட்டுகளும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ஒரே நீதிபதியின் கீழ் ஒன்றாக விசாரிக்கப்படும்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஜாலான் டூத்தாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் பயிற்சி மையத்திற்கு (அகாடமி) நஜிப் வரவழைக்கப்பட்டு, புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலான அறிவிக்கைகள் அவரிடம் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

1எம்டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற 42 மில்லியன் ரிங்கிட் பணப் பரிமாற்றம் தொடர்பில் 3 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளையும், நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற முறையில் அதிகார வரம்பு மீறலுக்கான ஒரு குற்றச்சாட்டையும் ஏற்கனவே நஜிப் எதிர்நோக்கியிருக்கிறார்.

கொண்டுவரப்படவிருக்கும் புதிய குற்றச்சாட்டுகளும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடையவையாகும்.

இந்தப் புதிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 5 மில்லியன் ரிங்கிட் அபராதம், அல்லது 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

Categories
Featured நீதிமன்றம்

நஜிப் வழக்கு; நீதிபதி மாற்றம்!?

நஜிப் வழக்கு; நீதிபதி மாற்றம்!?

27 ஜூலை 2018

மூன்று நம்பிக்கை மோசடி, ஓர் அதிகார துஷ்பிரயேகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வழக்கை, புதிய நீதிபதி செவிமடுக்கக் கூடுமெனத் தெரிகிறது.

நஜிப் மீதான குற்றச்சாட்டைச் செவிமடுக்க இருந்த உயர்நீதிமன்ற நீதிபதியான டத்தோ சோபியான் அப்துல் ரசாக், அம்னோ பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் சோஃபி  அப்துல் ரசாக்கின் இளைய சகோதரராக இருப்பதால், அவர் வழக்கைச் செவிமடுக்கக்கூடாதென, மலேசிய வழக்கறிஞர் மன்றம் கடுமையாக வலியுறுத்தியது.

நீதி பரிபாலன துறையின் நம்பகத்தன்மைக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதால், டத்தோ சோபியான் வழக்கைச் செவிமடுப்பதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமெனவும், வழக்கறிஞர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டத்தோ சோபியான், கோலாலம்பூர் வர்த்தக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது!

Categories
Featured Selangor நீதிமன்றம் பொது செய்திகள்

ஊனமுற்ற தாயின் மீது சுடு தண்ணீர் ஊற்றிய ஆடவனுக்கு ஈராண்டு சிறை

ஊனமுற்ற தாயின் மீது சுடு தண்ணீர் ஊற்றிய ஆடவனுக்கு ஈராண்டு சிறை

கோலாலம்பூர்,ஜூலை.27- வலக் கை ஊனமுற்றிருக்கும் தனது தாயின் மீது சுடுநீர் ஊற்றிய ஆடவனுக்கு ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

36 வயது தான் லாய் கிம் என்ற அந்த ஆடவன் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாயோன் தலிப் அத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.

இம்மாதம் 17-ஆம் தேதியன்று, தாமான் ஜிஞ்ஜாங் பாருவில் உள்ள வீடொன்றில், 65 வயது லியோங் ஆ ஹுவா மீது தான் சுடச் சுட நீரைக் கொட்டிருக்கிறார். அதனால், லியோங்கின் கழுத்துப் பகுதியிலும் கையிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. அதையடுத்து சம்பவ அன்றே தான் போலீசிடம் பிடிபட்டான்.

காசு கேட்டு கொடுக்காததால், தனது தாய்க்கு இத்தைய கொடுமை தான் இழைத்திருக்கிறான். அதனால், அவனுக்கு தகுந்த தண்டனையை வழங்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். எனினும், குடும்பத்தை தான் ஒருவனே பராமரித்து வருவதால் அவனுக்கு வெறும் ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Categories
Featured அரசியல் நீதிமன்றம்

இன-சமய அவமதிப்பு சட்டம்; எல்லா தரப்பு கருத்தும் ஏற்கப்படுமா?

இன-சமய அவமதிப்பு சட்டம்; எல்லா தரப்பு கருத்தும் ஏற்கப்படுமா?

கோலாலம்பூர், ஜூலை.27- நாட்டில் இனங்கள் மற்றும் சமயங்களை இழிவுப் படுத்தும் செயல்களை ஒடுக்குவதற்காக புதியச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னர், அது குறித்து அனைத்து தரப்பினரின் ஆலோசனையையும் அரசாங்கம் பெற வேண்டும் என்று சமூக அமைப்புக்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது.

இன, சமய அவமதிப்பை ஒடுக்கும் சட்டம் மற்றும் தேசிய அமைதி மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து எவ்வித விவரமும் இதுவரை பகிர்ந்துக் கொள்ளப் படவில்லை என்பதையும் ‘கபுங்கான் பெர்திண்டாக் மலேசியா’ என்ற அந்தக் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியது.

சமயங்களையும், இன்ங்களையும் அவமதிக்கும் செயலை ஒடுக்குவதற்கான சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கங்கள் வழங்கப் பட வேண்டும். அதேப் போன்று, தேசிய அமைதி மற்றும் நல்லிணக்க ஆணையக் குழு எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது என்பது குறித்தும் மக்களுக்கு அரசாங்கம் தெளிவுப் படுத்த வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பு அறிவுறுத்தியது.

அதுமட்டுமல்லாது, அந்த இன, சமய அவமதிப்பிற்கு எதிரான சட்டம் அமலுக்கு வந்தால், அதில் ‘வெறுப்புணர்ச்சியை தூண்டும்’ என்ற சொல் உட்படுத்தப் படக் கூடாது என்றும் அக்கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும் வண்ணம், சிலர் சமூக வலைத்தளங்களில் இன மற்றும் சமயங்களை அவமதிக்கும் கருத்துகளை வெளியிடுகிறார்கள். அதனால், இந்தப் புதியச் சட்டம் அமல்படுத்தப் படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ முஜாஹிட் யூசோப் ரவா அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

share

www.myvelicham.com face book

 

Categories
Featured Penang கல்வி நீதிமன்றம் மாநிலம்

மாணவி மானபங்கம்; ஆசிரியர் கைது

மாணவி மானபங்கம்; ஆசிரியர் கைது

இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆசிரியருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது. அதனை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ அ.தெய்வீகன் உறுதிப்படுத்தினார்

.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கலைக்கல்வி போதிக்கும் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு 2017-ஆம் ஆண்டு சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14-இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை முடிவடைந்தவுடன் இவ்வழக்கு தொடர் நடவடிக்கைக்காக மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும்.

Categories
Pahang நீதிமன்றம்

“60 மில்லியன் நகைகள் நான் வாங்கவில்லை” ரோஸ்மா மறுப்பு

“60 மில்லியன் நகைகள் நான் வாங்கவில்லை” ரோஸ்மா மறுப்பு

கோலாலம்பூர் – லெபனான் நாட்டிலுள்ள ஒரு பிரபல நகை விற்பனை நிறுவனம் மலேசியா ரிங்கிட் மதிப்பில் சுமார் 60 மில்லியனுக்கு ரோஸ்மா வாங்கிய நகைக்கான தொகையைச் செலுத்தவில்லை எனக் கூறி வழக்கு தொடுத்திருப்பதைத் தொடர்ந்து அவ்வாறு நகைகள் எதனையும் தான் வாங்கவில்லை என ரோஸ்மா மறுத்திருக்கிறார்.

14.79 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 59.831 மில்லியன்) நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் நகை வாங்கியதாகவும், அந்த நகைக்கான தொகையை இன்னும் செலுத்தவில்லை என்றும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் மூலம் கடந்த ஜூன் 26-ஆம் தேதி குளோபல் ராயல்டி டிரேடிங் என்ற அந்த நிறுவனம் வழக்கு தொடுத்திருக்கிறது. இந்தத் தொகைக்கு மொத்தம் 44 நகைகளை குளோபல் ராயல்டி டிரேடிங் என்ற அந்த நிறுவனம் ரோஸ்மாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

“குளோபல் ராயல்டி டிரேடிங் ரோஸ்மாவுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் வழக்கில் பட்டியலிட்டிருக்கும் நகைகள் எங்களின் கட்சிக்காரர் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு  பார்வையிடுவதற்காக அனுப்பப்பட்டது உண்மைதான். ஆனால் அந்த நகைகளில் எதனையும் அவர் வாங்கவில்லை. எனவே, திருடப்பட்ட பணத்தின் மூலமாக அந்த நகைகள் வாங்கப்பட்டன எனப் பரப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதோடு அவை அடிப்படையும் அற்றவை. கூடியவிரைவில் இதன் தொடர்பில் எங்களின் கட்சிக்காரரின் நற்பெயரையும் நலனையும் பாதுகாக்கும் வகையில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என ரோஸ்மாவின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் டத்தோ கே.குமரேந்திரன் மற்றும் டத்தோ கீதன் ராம் தெரிவித்தனர்.

Categories
Featured Kedah நீதிமன்றம்

‘சட்டம் 355’ -முஸ்லிம் அல்லாதார் விவாதிக்க உரிமை உண்டு! -அன்வார் அதிரடி

‘சட்டம் 355’ -முஸ்லிம் அல்லாதார் விவாதிக்க உரிமை உண்டு! -அன்வார் அதிரடி

 தங்களை மறைமுகமாக பாதிக்கக்கூடிய சட்டங்களாக இருந்தால் கூட, பொதுவாக அத்தகைய சட்டங்கள் பற்றிய விவாதங்களைச் செய்ய மலேசியாவிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு என்று பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டார்.

சில சட்டங்கள், நேரடியாக முஸ்லிம்களை மட்டும் பாதிக்கக்கூடிய சட்டங்கள் போன்று தோன்றினாலும் கூட அவை மறைமுகமாக முஸ்லிம் அல்லாதவர்களையும் பாதிப்பது தவிர்க்க முடியாதது ஆகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உதாரணமாக, பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்கினால் முன்மொழியப்பட்ட ஷரியா நீதிமன்ற (குற்ற நீதிமுறை) சட்டம் (சட்டம் 355) தொடர்பான திருத்த மசோதாவை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். நம் எல்லோரும் முஸ்லிம்களாக இருந்தால் அந்த மசோதா பற்றி கவலை இல்லை. அதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால், இவ்விஷயத்தில் முஸ்லிம் அல்லாதாவர்களுக்கு இதைப் பொருட்படுத்த வேண்டிய உரிமை இருக்கிறது என்றார் அன்வார்.

எந்தச் சட்டமாக இருந்தாலும், அது முழுக்க முஸ்லிம்களை மட்டும் பாதிக்கக்கூடியதாக இருந்தாலும், தவிர்க்க இயலாத வகையில் அது முஸ்லிம் அல்லாதவர்களையும் பாதிக்கும். எனவே, அத்தகைய சட்டங்கள் குறித்த விவாதங்களில் பங்கேற்கும் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு என்று அன்வார் விளக்கினார்.

மிகச் சிறிய பிரச்னையாக இருந்தாலும், முடிவில் அது தங்களை பாதிக்குமோ என்ற அச்சம் முஸ்லிம் அல்லாதர்களுக்கு இருக்கிறது. அவர்களின் அச்சத்தை போக்க, நாம் அத்தகைய பிரச்னைகளை மிகக் கவனமாக மதிப்பீடு செய்து, அவர்களை கவனமாக வழிநடத்த வேண்டும் என்று தி ஸ்டார் மற்றும் சினார் ஹராப்பான் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் அன்வார் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்ய ஒரு எம்பி என்ற முறையில் ஹாடி அவாங்கிற்கு உரிமை உண்டு என்பதை பிகேஆர் ஆதரிக்கிறது. ஆனால், அது பற்றி விவாதிக்கவும், அதில் திருத்தங்கள் செய்யவும், தேவை ஏற்பட்டால் அதனை நிராகரிக்கவும் இதர எம்.பி.க்களுக்கு உரிமை உண்டு என்பதையும் பிகேஆர் வலியுறுத்தியது என அவர் விளக்கினார்.

இதற்குக் காரணம் என்னவெனில், முன்மொழியப்பட்ட அந்த மசோதா முதலில் ஹூடுட் அல்ல. இரண்டாவதாக, அது ஹாடி அவாங்கினால் சொந்தமாக அர்த்தப்படுத்திக் கொண்ட விஷயம். தற்போது நாடு அனுபவித்து வரும் கருத்துச் சுதந்திரமானது, எந்தவொரு பிரச்னை மீதும் விவாதம் நடத்தவும் கருத்துச் சொல்லவும் போதுமான விசாலத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்று தாம் நம்புவதாக அன்வார் சொன்னார்.

மேலும், இந்த ‘சட்டம் 355’ மீதான விவாதங்கள் இடம்பெறுமானால், அதிகாரத்துவமான கருத்துக்கள் வெளிக்கொணரப் படுமானால், முன்மொழியப் பட்டிருக்கும் அந்த மசோதா தாக்குப் பிடிக்காது என்றார் அவர்.

இஸ்லாமிய கோட்பாடுகளைக் கடைபிடிக்க மறுக்கும் அளவுக்கு நாங்கள் ‘லிபரல்’ போக்கு கொண்டவர்கள் அல்லர். இஸ்லாமிய உணர்வுகளை நாங்கள் பிரதிபலிக்கிறோம். ஆனால், அதேவேளையில், குறிப்பிட்ட அர்த்தங்களை ஏற்றுக்கொள்ளும் படி மற்றவர்களைக் கட்டாயப்படுத்தும் காலம் கடந்த பழமைவாத இஸ்லாத்தை நாங்கள் பிரதிநிதிக்கவில்லை என்றார் அன்வார்.

Categories
Uncategorized நீதிமன்றம்

மீண்டும் உலகத்தின் பார்வையில் மலேசியா….முன்னாள் பிரதமர் நஜீப் கைது

மீண்டும் உலகத்தின் பார்வையில் மலேசியா….முன்னாள் பிரதமர் நஜீப் கைது

.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நாட்டின் அப்போதய துணை பிரதமர்   அன்வர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.அப்போது நாடும் உலகமும் அதிந்தது.இப்போது நாட்டின் முன்னாள் பிரதமர் நஜீப் கைது செய்யப்பட்டுள்ளார்.இருவருக்கும் மிக பெரிய வித்தியாசம்.ஒருவர் அரசியல் சதி காரணமாக கைது செய்யப்பட்டார்.20 ஆண்டுகள் போராட்டத்திற்கு  பிறகு 2018 போதுதேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து.

அதிகார துஸ்பிரயோகம் லஞ்ச லாவண்யங்களால் நாட்டை சீரழித்த நஜீப்ப்பை ஆட்சிக்கு முடிவு கட்டி நாட்டை செம்மைய நடத்தி உலக சாதனை பாடைத்துள்ளார்.இந்த மகத்தான சாதனையின் கதாநாயகர்கள் மலேசிய மக்கள்.மீண்டும் வரலாற்றில் இன்று.10 ஆண்டுகள் நாட்டை நிர்வாகம் செய்த  நஜீப் மற்றும் அவர்களின் சகாக்கள் நாட்டை கொள்ளையடித்து சுடுகாடக்கியத்திற்காக முதல் கட்டமாக 4கோடி கையாடல் செய்தமைக்காக நேற்று கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்றப்படவுள்ளார் .

அவர் மீது மாலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 10 குற்றங்களை முன்வைத்துள்ளது.அரசு தரப்பில் சட்டத்துறை தலைவர் டோமீ தோமஸ் தலைமையில் ஒரு குழு இந்த வழக்கை எதிர்கொள்கிறது.மீண்டும் உலகின் பார்வையில் மலேசியா.

Categories
English News Featured நீதிமன்றம்

Tommy Thomas’ appointment as AG will not affect status of Islam, Malay rights: Anwar

Tommy Thomas’ appointment as AG will not affect status of Islam, Malay rights: Anwar