அரசு அதிகாரி கற்பழித்து, கொலை: லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!

0
84

அரசு அதிகாரி கற்பழித்து, கொலை: லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!

சிபு, ஆக.21- சிபு பகுதியைச் சேர்ந்த பொதுச் சேவை உறுப்பினர் ஒருவரை கற்பழித்து கொலைச் செய்ததாக அதேப் பகுதியைச் சேர்ந்த லோரி ஓட்டுநர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டது.

இம்மாதம் 1-ஆம் தேதி மற்றும் 2-ஆம் தேதியன்று, ஜாலான் தியோங் ஹுவா என்ற பகுதியில் உள்ள அறையில் நூர்னியா அஸாலியா என்ற அந்தப் பெண்ணை, 42 வயதான ஃபிலீப் உஜா என்ற அந்த ஆடவன் கற்பழித்து, பின்னர் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.

அந்த ஆடவன் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள், இபான் மொழியில் அவனுக்கு வாசிக்கப் பட்டது. அவனின் வாக்குமூலம் ஏதும் பதிவுச் செய்யப் படவில்லை. அவன் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.

அந்த ஆடவன் அப்பெண்ணைக் கொலைச் செய்தான் என்று நிரூபிக்கப் பட்டால், குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ், அவனுக்கு கட்டாய மரணத் தண்டனை விதிக்கப் படும்.

அப்பெண்ணை அவன் கற்பழித்துள்ளான் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால், குற்றவியல் சட்டத்தின் 376 (4) பிரிவின் கீழ், அவனுக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் 10 பிரம்படிகள் விதிக்கப் படும்.

கொலைச் செய்யப்பட்ட பெண்ணின் மீது நடத்தப் பட்ட பிரேத பரிசோதனை மற்றும் இரசாயன அறிக்கைகள் இன்னும் வெளியிடப் படாததால், அவ்வழக்கு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது என்று நீதிபதி கரோலீன் பீ அறிவித்தார்.

கொலையுண்ட நூர்னியாவின் உடல், அவர் தங்கியிருந்த அறையில், ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதியன்று, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், அரை நிர்வாண கோலத்தில் அவருடன் பணி புரியும் சக பொதுச் சேவை ஊழியரால் கண்டெடுக்கப் பட்டது.

நூர்னியா வேலைக்குச் செல்லவில்லை என்பதை அறிந்த அவரின் கணவர், நூர்னியாவுடன் வேலைப் பார்க்கும் ஊழியரை தொடர்புக் கொண்டு, தனது மனைவியின் இருப்பிடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

Your Comments