டிஏபி கட்சி சீனர்களை மட்டுமே உயர்த்தும் கட்சி பி. இராமசாமி சாடல்
DAP is a party that only elevates Chinese P. Ramasamy

டிஏபி கட்சி சீனர்களை மட்டுமே உயர்த்தும் கட்சி
பி. இராமசாமி சாடல்
அண்மையில் நடைபெற்று முடிந்த டிஏபி எனும் ஜனநாயக செயல் கட்சியின் தேர்தல் முடிவுகள், மத்திய செயற்குழுவின் வெற்றிப் பெற்றவர்கள் பெரும்பான்மையானவர்கள் சீனர் சமூகத்தினரைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. எனவே இக்கட்சியானது சீனர் சமூகத்தினரை உயர்த்தும் ஒரு கட்சியாக நிரூபித்துள்ளது.
பல்லின உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக்கட்சியின் தேர்தல் முடிவு இதனைத் தெளிவாகக் காட்டுவதாக என்று டிஏபி கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது துணை முதல்வருமான பேராசிரியர் பி. இராமசாமி அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சாடியுள்ளார்.