இது வரை 500 மில்லியனுக்கு மேல் நிதி வழங்கி இது வரை வரலாறு காணாத சாதனை படைத்துள்ளார்
Dato Seri Najip He has donated more than $500 million so far INDIAN Community's
02 Jan 2025 News By - PonRangan
பாக்காத்தானில் பி கே ஆர் கட்சியின் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரின் பொறுப்பான சேவைகளை கண்டு நாடே வியக்கிறது. 15ஆவது தேர்தலுக்குப்பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூடுதல் பதவி கொடுத்து பிரதமர் அழகு பார்க்கிறார்.
முதலில் மித்ராவின் தலைவர் பிறகு கோப்ராசி அமைச்சின் துணை அமைச்சராக பல கோடிகளை இந்தியர் சமூகத்திற்கு வாரி வழங்கி வருகிறார். 2024 ஆண்டு முடிய இது வரை 500 மில்லியனுக்கு மேல் நிதி வழங்கி இது வரை வரலாறு காணாத சாதனை படைத்துள்ளார்
.
நஜீப் பிரதமராக இருந்த காலத்தில் செடிக் இத்தகு சாதனையை படைக்கவில்லை என மக்கள் பெருமைப்படுகிறார்கள். துன் சாமிவேலு, பழனிவேலு, சுப்பரமணியம் இப்போ விக்னேஸ்வரன் காலத்தில் கூட இத்தகைய சன்மானம் இந்திய சமூகத்திற்கு கிடைத்ததில்லை எனலாம்.
மித்ரா தலைவராக 2023 ஆம் ஆண்டு மித்ராவில் 106 மில்லியன் வரை இந்திய சமூகத்திற்கு கொடுத்தார். 2024 ஆம் ஆண்டு இவரின் மேற்பார்வையில் பி.பிரபாகரன் நிருவாகத்தில் 96.4 மில்லியன் கொடுத்தாகி விட்டது. 2025 ஆம் ஆண்டு இவ்வாண்டு 130 மில்லியன்.மேலும் சுமார் 215 இந்தியர் கூட்டுறவுகளுக்கு தலா 30 ஆயிரம் மானியமாக கொடுத்துள்ளார். இவ்வாண்டு
மித்ரா மற்றும் கூட்டுறவு சங்கங்களின் வழி இன்னும் 500 மில்லியனை எட்டி சாதனை படைப்பார் என நம்புவோம்.
வரும் 16 ஆவது பொதுத்தேர்தல் வர 2026/2027 இன்னும் இரண்டு ஆண்டுகளில் 100 கோடியை தொடுவார் என ஆய்வுகள் கூறுகின்றன.
' மாபெரும் சபைதனில் நீ நடந்தால் மாலைகள் விழும். மாசு குறையாத மன்னவர் போல் வெற்றி பெற்று ரமணன் அவர்கள் முழு அமைசாரானால் இன்னும் பல சாதனைகளை அமச்சரவையில் பேசுவார் சாதிப்பார் என இந்திய சமூகம் நம்பிக்கையுடன் அவருக்கு 2025 ஆம் ஆண்டு நீண்ட ஆயுளை கொடுத்து மை வெளிச்சம் வாழ்த்தும் வேளையில் இந்தியர்களுக்கு ஒரு பொருள் ஆதாரமிக்க ஒரு ஜி எல் சியை இந்திய சமூகத்திற்கு அன்வார் காலத்தில் பெற்றுத் தந்து ஓரு வரலாற்று சாதனை படைக்க வேண்டும்.
ஒரு சிறப்பான முழு அமைச்சர் பதவி காலத்தின் கட்டாயமென இருபது லட்சம் இந்தியர்களும் நம்பும் இந்த இக்கட்டான நேரத்தில் இவரின் ஆற்றலுக்கு இந்தியர்களின் பாக்காத்தான் ஓட்டு வங்கி 95% விழுக்காட்டை தொடும் பொன்னான ஒற்றுமை மடானி அரசை அரசியலை வலுப்படுத்தும் என நிச்சயமாக நம்பி புத்தாண்டு, தமிழர் புத்தாண்டு இனிப்பான பொங்கலையும் பெற்று நல்லாசி பெறுவோமாக! திருக்குறளில் "படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறுவார்.
போர்ப்படை, குடிமக்கள், உணவு, ஆலோசனை தரும் அமைச்சர்கள், நட்பு, அரண்மனை ஆகிய ஆறும் பெற்றவரே அரசருள் சிறந்தவர்.
துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.
www.myvelicham.com / Face Book -myvelicham.com / You Tube MyVelichamtv