தமிழ்ப்பள்ளிகளை காப்பது நம் கடமை என்றார் டத்தோ மூர்த்தி கந்தையா.
Datuk Murthy Kandiya said it is our duty to protect Tamil schools.
News By :RM Chandran
30 August 202 -தமிழ்ப்பள்ளிகளை காப்பது நம் கடமை என்றார் டத்தோ மூர்த்தி கந்தையா.
தொழில் திறன் கல்வி (Tvet) மலேசிய இந்தியர்கள் தலைவராகவும் தோற்றுனராகவும் இருக்கும் டத்தோ மூர்த்தி கந்தையா உலு சிலாங்கூர் செங்காட் ஆசா தோட்டத்தமிழ்ப்பள்ளிக்கு 50 நாற்காலிகள் வழங்கினார்.
பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு தேவைப்படும் என்பதை அறிந்து பள்ளித்தலைமையாசிரியர் திருமதி கலை கோகிலா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நன்கொடைகளை பள்ளிக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டார்.
பள்ளிகளுக்குத் தேவையான இது போன்ற உதவிகளை வழங்க முன்னாள் மாணவர்களும் தொழிலதிபர்ளும் முன் வரவேண்டும்.
அது மட்டுமல்லாமல் தமிழ்ப்பள்ளிளுக்கு தங்களின் பிள்ளைகளை பெற்றோர்கள் அனுப்ப வேண்டும். பல பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக உள்ளனர் என்பதை பலரும் அறிவர்.
நமது தமிழ்ப்பள்ளிகளை காப்பது நம் கடமை. அதனை நாம் தான் பாதுகாக்க வேண்டுமென பத்தாங் பர் ஜுந்தை, நைகல் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரான டத்தோ மூர்த்தி கந்தையா கேட்டுக்கொண்டார்.