அனைவரையும் அரவணைக்கும் பாஸ் கட்சி என்று டத்தோ பன்னீர்செல்வம்

Datuk Panneerselvam calls PAS party that embraces everyone

அனைவரையும் அரவணைக்கும் பாஸ் கட்சி  என்று டத்தோ பன்னீர்செல்வம்

News By: RM Chandran Date : 15 Jan 2025

இன ஐக்கிய  ஒற்றுமை  அடிப்படையில் பாஸ் கட்சி  ஏற்பாடு செய்த  நாம் நண்பர்கள் (Feista  Kita kan Kawan) எனும் நிகழ்ச்சியை கடந்த 12-1-2025 ஆம் நாள் செமினி பாஸ் கட்சி  மக்கள் சேவை மையம் ஏற்பாடு செய்தது.

 நம் நாட்டில் பல்வேறு இனங்கள் மற்றும் பாரம்பரியங்களுக்கும் ஒற்றுமைக்கும் இடமளிக்கும் திட்டமாகும். இவை மற்ற இனங்கள் மீதிலான  பாஸ் கட்சியின் வெளிப்படைத்தன்மையையும் உள்ளடக்கிய புரந்துணர்வையும் எடுத்துக்காட்டுகிறது.


 உலுலங்கட்'டின்  DHPP தலைவரும் சிலாங்கூர் மாநில  பாஸ் கட்சியின் துணைத்தலைவருமான டத்தோ டாக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் 40 குடும்பங்களை  சேரந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்டது  PAS யின்  முன்னுரிமையாக மாறி வருவதற்கு ஓர் அடையாளம் என்றார்.


உலு லங்காட்டின் உறுப்பினர்ள் (Parti DHPP Hulu Langat )
 ஜனவரி 14 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில  அவர்களுடன்  இணைந்து அவர்களுக்கு பொங்கல் பானைகள், இனிப்புகள், பால் பொங்கல் வைப்பதற்கு  தேவையான அரிசி,  மற்ற பொருட்களையும்  வழங்கியதாகவும்

 பாஸ் கட்சி நமது பாரம்பரிய கலாச்சார மரபினை மதிக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த சான்றாக விளங்குவதாகவும் டத்தோ டாக்டர்  பன்னீர்செல்வம் கூறினார்.

 (YDP PAS Hulu Langat Area Tuan Mohd Jan, Lajnah Perpaduan Kawasan மற்றும் YB Ustaz Nushi Mahfodz ADN N24 Semenyih ) இந்த நிகழ்வை வெற்றியடையச் செய்வதற்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் வழங்கியது

என்று செமினி பாஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினரின் மக்கள் சேவை மைய இந்தியர் சமூக நல அதிகாரியும்  DHPP தகவல் பிரிவு தலைருமான  பூபாலன் பன்னீர்செல்வம் டி  தெரிவித்தார்.