டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களின் முயற்சியால் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு 4,000 சதுர அடியில் நிலம் கிடைத்தது

Datuk Seri M. Due to Saravanan's efforts, Devi Sri Badrakali Amman Temple got 4,000 square feet of land

டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களின் முயற்சியால் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு 4,000 சதுர அடியில் நிலம்   கிடைத்தது
டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களின் முயற்சியால் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு 4,000 சதுர அடியில் நிலம்   கிடைத்தது

Date : 26 March 2025 News By:Rm Chandran 

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்கு
அதே பகுதியில் நிலம் கிடைத்துள்ளதை
டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியிலுள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் நிலப் பிரச்சினை தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக மஇகாவின் தேசிய துணைத் தலைவர் மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் பத்திரிகை செய்தியில் கூறியுள்ளார்.

 www.myvelicham.com 

இன்று மாலை 3 மணி அளவில் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோ Zaliha Mustafa அவர்களின் சந்திப்பின் வழி நேற்று வரை கேள்விக் குறியாக இருந்த நிலையில் கோயிலுக்கு,  4,000 சதுர அடி நிலம், இப்போது இருக்கின்ற இடத்திலிருந்து 50 அடி தூரத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.