இன ஏற்றத்தாழ்வு களையப் பட வேண்டும்  என்று கூறினார் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

Deputy Minister Yb,Saraswathy Kandasamy said that racial disparity should be eradicated

இன ஏற்றத்தாழ்வு களையப் பட வேண்டும்  என்று கூறினார் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி
இன ஏற்றத்தாழ்வு களையப் பட வேண்டும்  என்று கூறினார் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

News By ;RM Chandran 

03 Sept 2024- இன ஏற்றத்தாழ்வு களையப் பட வேண்டும்  என்று கூறினார் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

கோலாலம்பூர், செப் 2 நம் நாடு தொடர்ந்து வெற்றி பெறுவதற்கும்  பல்வேறு துறைகளில் முன்னேறுவதற்கும்
 இனங்களுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகள் கண்டிப்பாக களையப்பட வேண்டும் என தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார். 

மலேசியா விடுதலை பெற்றதில், பல இன மக்கள் ஒருங்கிணைந்து பெரிய பங்காற்றியுள்ளதும் பல இன மக்களின் ஒற்றுமை, ஒருமித்த செயல்பாடுகளும் இவற்றில் அடங்கும்.

மலேசியா உருவாக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் அனைத்து இனங்களின் பங்களிப்பும் துணை இருந்ததை மறந்து விடக்கூடாது.
என்று கூறினார் சரஸ்வதி கந்தசாமி

 பல இனங்களை கொண்ட நாட்டில ஏற்றத்தாழ்வுகள் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

அதே வேளையில் அனைத்து அரசு முயற்சிகளுக்கும் ஒரு தரப்பட்ட
இணைக்கத் கடைப்பிடிக்கும் நிலை மாறவேண்டும்.
மலேசியாவின் பல்வேறு வகையான இன நல்லிணக்கத்தை காக்கவும்,  சிறந்த கட்டமைபை உருவாக்கவும் பாகுபாடற்ற இணக்க போக்கை நிலை நிறுத்த வேண்டும்.

 

ஏற்றத்தாழ்வு மாநாடு கோலாலம்பூரில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த பொழுது துணையமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

 இவ்வாண்டு 12ஆவது முறையாக நடத்தப்பட்ட  ஏற்றத்தாழ்வு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய
சரஸ்வதி,மாநாட்டின் முக்கியத்துவம், அனைத்து  இனங்களுக்கும் சரி சமமான் வாய்ப்புகளை கொடுத்து ஒற்றுமையை வலுப்படுத்தவும் நாட்டின் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவும் பரிந்துரைகளை வழங்கும் என்று  கூறினார்.

இம்மாநாட்டில் கோமாஸ் மையத்தின் இயக்குநர் ஜெரால்டு ஜோசப், சிலாங்கூர் மாநில சபாநாயகர் லாவ் வெங் சான், பினாங்கு இளைஞர், விளையாட்டு,சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் யல் கூய் ஜி சென், மனிதவள அமைச்சின் செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி பின் தாவுத், மலேசிய தொடர்பு, பன்மொழி ஆணையத்தின் துணை மேலாண்மை இயக்குநர் டத்தோ சுல்கர்னைன் பின் முகமது யாசின், திரங்கானு சட்டமன்றச் செயலாளர் துவான் ஹாஜி சுவ்ஸ்லான் பின் அவாங்க், உளவுத்துறை, தேசிய நெருக்கடி மேலாண்மை பிரிவு இயக்குநர் தாஜுல் அரிஃபின் பின் முஹம்மது, கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வெய், மலேசிய மனிதவள மன்றத்தின் தலைமை செயல் அதிகாரி அருள்குமார் சிங்காரவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.