நிலப்பிரச்சினைகளை எதிர்நோக்கும் ஆலயங்களின் விவரங்கள் சேகரிக்கப்படும்.
Details of temples facing land problems will be collected.

Date :26 March 2025 News By; RM Chandran
நாட்டில் நிலப்பிரச்சினைகளை எதிர் நோக்கும் ஆலயங்களின் புள்ளி விவரங்களை சேகரித்து அவற்றுக்கு தீர்வு காண குழு அமைக்கப்படுமென தேசிய ஒருமைப்பாட்டுத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
அண்மையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கடந்த 30 நவம்பர் 2024-ல் நடைபெற்ற இந்து வழிபாட்டு தளங்கள் மீதான ஆலய கலந்துரையாடலில் இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் (Aron Ago Dagang)
தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் 700க்கும் மேற்பட்ட ஆலயத்தலைவர்கள், இந்து சமய அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாநிலங்களிலும் நிலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் ஆலயங்களின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டுமென இச்சந்திப்பில் பேசப்பட்டதாக தெரிவித்தார்
.
மலேசிய இந்து சங்கம் இதற்கான தீர்வை காணுவதற்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. சமூகங்களுக்கிடையே தவறான அணுகு முறைகளை தவிர்ப்பதற்கு சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில்,அவை 8 தீர்மானங்களாக கொண்டுவரப்பட்டு,
இறுதி அறிக்கை கடந்த 12 மார்ச் 2025-ல் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதையும்,
இதனை நடைமுறைப்படுத்த பிரதமர் இலாகா கீழ் செயல்படும் மித்ரா நிதியை பயன்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையும் குறிப்பிட்டார்.
ஆலய நிலப்பிரச்சனை தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து பல்லின மக்களிடையே விரும்பதாக விவாதங்கள் ஏற்படுகிறது என்றும் இந்த தீர்மானங்கள் அமைச்சரவையில்
சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செனட்டர் சரஸ்வதி குறிப்பிட்டார்.
www.myvelicham.com