தொழிற்நுட்பதிற்கேட்ப பிள்ளைகளை உருவாக்க வேண்டும்: டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் வலியுறுத்து.
Develop children who are technologically educated: Datuk Seri Said Ibrahim insisted.

28 Marcg 2025 News By:Anbarasan Sg Petani
இன்றைய தொழிட்நுட்பம் முற்றிலும் மாறுப்பட்ட நிலையில் இருக்கிறது அந்தப்புதிய தொழில்நுட்ப கல்வியினை பயின்றால் மட்டுமே அவர்களோடு போட்டியிட முடியுமென கிம்மா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் பின் காதிர் வலியுறுத்தினார்.
சுங்கைபட்டாணி முஸ்லிம் லிக் மண்டபத்தில் நடைபெற்ற நோன்புப்பெருநாள் அன்பளிப்பு வழங்கும் நிகழவில் கலந்து கொண்டு பேசிய ஜைட் இப்ராஹிம்,
உலகம் ஏ-ஐ(AI)தொழிற்நுட்பத் துறையில் வளர்ச்சி அடைந்து
வருகிறது. சீனாவில் ஓட்டுனர் (Driver) இல்லாத வாகனங்களும் பேருந்துகளும் கண்டு பிடித்த நிலையில், நமது பிள்ளைகள் கல்வியை முடித்தவுடன் வேலைக்கு அனுப்புவதை தவிர்த்து,புதிய தொழிற்நுட்டபத்துறையியை கற்பதற்கு நாம் வழி வகுத்தால் மட்டுமே காலத்தோடு போட்டியிட முடியும் என்றார்.
இந் நாட்டில் சலுகைகள் அனைத்தும் பூமி புத்ராக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எங்களுக்கு
பூமி புத்ரா அங்கீகாரம் கிடைக்கவில்லை.அதற்காக தாம் போராடாடுவதாகவும் எனக்கு பின்னால் யாரும் இல்லை என்பதை வருத்தமுடன் குறிப்பிட்டார்.
தொழிலதிபர் டத்தோ மாலிக் 100 பேருக்கு நோன்புப் பெருநாள் உதவித் தொகையினை வழங்கினார்.
கெடா கிம்மா கட்சி, வசதி குறைந்தவர்களுக்கு நோன்புப் பெருநாள் உணவுப்பொட்டங்களை
,பள்ளிமாணவர்களுக்கும் வழங்குவதுவதாகவும் மாநிலத் தலைவர் நவாப் ராஜா கூறினார்.
கெடா மாநில கிம்மா கட்சியின் தலைவராக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வரும் நவாப் ராஜா,பட்டம் பதவிக்கு எதனையும் கேட்டதில்லை சேவைகள் அனைத்தும் மக்களுக்கே என்று கெடா கிம்மா கட்சியினர் தெரிவித்தனர்.