செந்தோசா சட்டமன்ற தொகுதியில் சேவையாளர்களுக்கு விருந்தும் பாராட்டும்
Dinner and felicitation for the servicer in Sentosa assembly constituency
09 June 2023
செந்தோசா சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறப்பாக சேவையாற்றிய 120 சேவையாளர்களில் 10 பேருக்கும் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி அவர்களால் சேவை அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முதலில் பாடல், பின் தொடர்ந்து பின்னணி இசையுடன் கோலா களமாக விருந்து தொடங்கியது. முதலில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்ட குலுக்கு நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 14 நபர்களுக்கு பரிசு வழங்கப் பட்டன.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க செந்தோசா சட்ட மன்ற தொண்டர்களால் நடத்தப் பட்டது.. செந்தோசா சட்ட மன்ற தொகுதி தொண்டர்கள் குழுவின் செயலாளர் டாக்டர் உமா இராணி செயலாளராக இருந்து ஏற்பாடுகளை செய்தார். நேற்றைய நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இந்த சிறப்பு நிகழ்வு கடந்த ஆண்டே நடத்த திட்ட மிடப் பட்டது. ஆனால் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்தால் மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட கால அவகாசம் தேவை பட்டதாக கூறினார் டாக்டர் குணராஜ்
.
இந்த நிகழ்ச்சியில் நாட்டின் புகழ் பெற்ற பூப்பந்து வீரரும் , அத்தொகுதியில் வசிப்பவரான குமாரி தினா முரளிதரன் மற்றும் அவர்களது பொற்றோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் என்பது சிறப்பு அம்சம்.
சேவையாளர் பெயர்கள் தேர்வு குழுவிற்கு முன் மொழியப்பட்டது. இதில் சமூக அமைப்புக்கள், ஆலயங்கள், சீன ஆலயங்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், தனி நபர்கள், செல்வாக்கு பெற்ற செல்வந்தர்கள் என மா பெரும் பட்டியலே அடங்கியுள்ளன. இவர்கள் அனைவரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரோடு அல்லது தனித்தோ சிறப்பாக மக்களுக்கு சேவையாற்றியுள்ளனர்.
இந்த நற் சேவையாளர்களை முறையாக அடையாளங்கண்டு தேர்வு செய்யும் பொறுப்பு நால்வர் அடங்கிய தேர்வு குழுவினருக்கு வழங்கப் பட்டது. இந்த தேர்வுக் குழு 120 பேரிலிருந்து மகத்தான சேவையாற்றிய 10 பேர்களை தேர்வு செய்தனர். அந்த 10 பேருக்கும் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி அவர்களால் சேவை அங்கீகாரம் வழங்கி முறையாக கௌரவிக்கப்பட்டனர்.
இந்த வரலாற்று பூர்வமான நிகழ்ச்சியில் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங், கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, கிள்ளான் வட்டார வணிக பெருமகனார் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் ப.தியாகராஜன், கிள்ளான் நகராண்மை கழக இந்திய உறுப்பினர்கள், இந்திய சமுதாய தலைவர்கள் ( KKI ) மற்றும் சிலாங்கூரின் பல்வேறு பாகங்களில் இருந்தும் ஏறக்குறைய 500 க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பாக கல்ந்துக் கொண்டனர் என்பது குறிப்பிட தக்கது
www.myvelicham.com : face book myvelicham.com