விவாதம் நிறுத்தப்பட்டது டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிவிப்பு
Discussion terminated Datuk Seri M. Saravanan's announcement

Date - 12 March 2025 News By ; Jayarathan
நாட்டின் ஒற்றுமை துறை அமைச்சர் மாண்புமிகு அரோன் ஆகோ டகாங் அவர்கள் மற்றும் மற்றும் காவல்துறையும் கேட்டுக் கொண்டதற்கு ஏற்பவும், மற்றும் மஇகாவின் தேசியத் தலைவர் மதிப்புமிகு டான்ஸ்ரீ எஸ். விக்னேஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு ஏற்பவும் ஜம்ரி விநோத்துடன் நடத்தக்கூடிய நேரடி விவாதம் நிறுத்தப்பட்டுள்ளது.
அண்மையக் காலமாக இந்நாட்டில் வாழும் இந்துக்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், இழிவுப் படுத்தும் வகையிலும் நடந்துவரும் ம் இதுபோன்ற சமயம் சார்ந்த விவகாரங்களை உடனடியாக தடுத்து நிறுத்தாவிடில், இது இதர மத, சமயத்தினரையும் பாதிக்கும் என்பதால், அரசாங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து நிறுத்த வேண்டுமென்று, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகாவின் தேசியத் தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் பத்திரிக்கைக்கு விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.
www.myelicham.com /Face book /Tik Tok /Intg /You Tube /Google