மலேசியர்களின் உடல் நலம் ஆரோக்கியம் சமூக விழிப் புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் டாக்டர் ஏ.வி.பிரசாத்

Dr. A. V. Prasad said that Malaysians need to increase social awareness of their health and well-being.

மலேசியர்களின் உடல் நலம் ஆரோக்கியம் சமூக விழிப் புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் டாக்டர் ஏ.வி.பிரசாத்
மலேசியர்களின் உடல் நலம் ஆரோக்கியம் சமூக விழிப் புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் டாக்டர் ஏ.வி.பிரசாத்

News By : RM Chandran

 

20 August 2024 - மலேசியர்களின் உடல் நலம் ஆரோக்கியம் சமூக விழிப் புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் டாக்டர் ஏ.வி.பிரசாத்

செபராங் ஜெயா சன்வே மால் 2024 சுதந்திர மாதத்துடன் இணைந்து இலவச இரத்த தானம், சுகாதாரப்பரிசோதனை நடைபெற்றது.

ஜூரு பாலிகிளினிக், பாகான் பாலிகிளினிக், டாக்டர் வேலு பாலிக்ளினிக், செபராங் ஜெயா மருத்துவமனை இரத்த மாற்று பிரிவு, சன்வே கார்னிவல் மால், பினாங்கு நலன், மேம்பாட்டு சங்கம் நண்பர்கள்  ஆகியவை இணைந்து இந்நிகழ்வை
ஏற்பாடு செய்தனர்.

 100க்கும் மேற்பட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் இரத்த தானம் செய்வதற்கு முன் வந்தனர்.  மலேசியர்களின்  உடல் நலம் ஆரோக்கியம்,சமூக விழிப்புணர்

மலேசியர்களின்  உடல் நலம் ஆரோக்கியம், அவர்களின் நல் வாழ்வு  ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த திட்டம் எதிர்காலத்தில் தொடரும் என்று  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஒருவரின் ஆரோக்கியத்தை கவனிப்பது  முக்கியத்துவம் குறித்த சமூக விழிப்புணர்வை அதிகரிக்க உதவியதாகவும் இருந்தாக ஏற்பாட்டாளர் கூறினர்.

இரத்த தானம் செய்த பிறகு, நன்கொடையாளர்களுக்கு 
 டாக்டர்கள் குழு நடத்திய இலவச சுகாதாரப் பரிசோதனை செயதனர் இரத்தம், சிறுநீரகப்பரிசோதனை பற்றுச்சீட்டையும் பெற்றனர். 

 ஜூரு பாலிக்கிளினி இயக்குனர் டாக்டர் ஏ.வி. பிரசாத், கூறும் போது,  மலேசியர்களிடையே  நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு  ஆகியவற்றை தடுக்க ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கலாம்

.

பி40 தரப்பை சேர்ந்தவர்கள், சுதந்திர மாதத்தில் இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும் வகையில், இந்தச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் 30 செப்டம்பர் 2024 வரையில் நடப்பிலிருக்கும் என்றார்.

மலேசியர்களிடையே தேசபக்தியை வளர்க்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு  செய்யப்பட்டது. 

நண்பர்கள்  நலன் மேம்பாட்டு சங்கத் துணைத் தலைவர் பூபாலன் பேசும்  போது, மலேசிய குடிமக்கள் என்ற முறையில் மரியாதை, பெருமையின் அடையாளமாக மாதம் முழுவதும் அனைத்து மலேசியர்களும் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்

.

 நன்கொடையாளர்களுக்கும்  அழகிய குவளை மலேசியக்கொடிகள்
 வழங்கப்பட்டது.  நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக வீடமைப்பு சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ  எஸ். சுந்தரராஜு, பினாங்கு நண்பர்கள் நலன்,மேம்பாட்டு சங்கத்தலைவர் டத்தோஸ்ரீ 
எம். விக்னேஸ்வரன்,செபராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பி.இஷார், அவரின் துணைவி புவான் புத்திரி, ஜூரு பாலிக்
கிளினிக் இயக்குனர்டாக்டர் ஏ.வி.பிரசாத், பாகான் பாலிக்
கிளினிக் இயக்குனர் டாக்டர் கிஷோந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு

டத்தோஸ்ரீ எஸ்.சுந்தராஜு'வின் பிரதிநிதியும் நகாண்மைக்கழக உறுப்பினருமான பொன்னுதுரைக்கு நினைவுப் பரிசை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு
வழங்கிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி கூறியதுடன்

Contack Number : Dr,A.V Prasaad 019-810 1810 / Mr.Karthik :010-383 5905

 Vinod : 012-929 3569 எதிர்காலத்திலும் இச்சேவை தொடரும் என்றும் தெரிவித்தனர்.

Share your fds, whats groups :

உங்கள் குழுக்கள், தெரிந்த நபர்கள்  குறைந்தது 100 பேரை இலக்காகக் கொண்டு  அனைவருக்கும் அனுப்பவும். 10 பேருக்கு தெரிவான புரிதலை ஏற்படுத்த வேண்டும். 'நமது கடமையை  செய்வது நமது உரிமை' ' தமிழ்ப்பள்ளகளின்  எதிர்காலம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்' 'இதைப் புரிந்துகொண்டு. What's App  குழுவில் பகிருமாறு ,

www.MyVelicham.Com MyNews MyMedia Advt 013-3933002