மாணவர்களுக்கு இடம் பற்றாக்குறையின் காரணமாக உயரமான கட்டிடங்களைக் கொண்ட பள்ளிகள் கட்டப்படும்
Due to lack of space for students Schools with tall buildings will be built

Date : 21 March 2025 News By : Punithai chandran
மாணவர்களுக்கு இடம் பற்றாக்குறையின் காரணமாக
உயரமான கட்டிடங்களைக் கொண்ட பள்ளிகள் கட்டப்படும்
அதிகரித்துவரும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிக்கூட கட்டிடங்கள் மிக உயரமாகக் கட்டப்படும் வேளையில், சிறிய அளவிலான நிலங்களைக் கொண்ட பள்ளிக்கூடங்களில் உள்ள கட்டிடங்களை உயரமாக உயர்த்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடெக் பத்திரிகைக்கு விடுத்துள்ள ஒரு செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அன்வார் இன்பராஹிம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற நீண்ட நேர ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் கட்டுவதற்கு நகரத்தில் குறிப்பிட்ட நிலம் மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் இந்த ஆலோசனை பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும் கல்வி அமைச்சர் கூறியதாக தெரிகிறது.
Thank you - FMT