Categories
Featured தலையங்கம்

கோவிட் – 19 யின் காரணமாக கொள்ளை லாபம் அடிக்கும் நிறுவனங்கள்….


நாட்டை கோவிட் – 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பயனீட்டாளர்களிடமிருந்து கொள்ளை லாபம் அடிப்பதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என மலேசிய நண்பன் இப்புதிய அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் பல்வேறு தரப்பினர் தங்களின் சக்திக்கு ஏற்றவாறு மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளைச் செய்து வருகின்றனர். ஆனால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மூலமாக கோடிக்கணக்கான வெள்ளி வருமானம் பெறும் ஆஸ்ட்ரோ கட்டண தொலைக்காட்சி நிறுவனம் உட்பட மெக்சிஸ், டிஜி, செல்கோம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எந்த வகையில் மக்களின் சுமையைக் குறைப்பதற்கு தங்களின் பங்கினை ஆற்றி வருகிறது என்றால், ஒன்றுமே இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். பயனீட்டாளர்களிடமிருந்து பல கோடி வெள்ளியை லாபமாகப் பெறும் மேற்கண்ட நிறுவனங்கள் இதுபோன்ற நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் நிதிச்சுமையை எதிர்நோக்கி வரும் மலேசியர்களுக்கு தங்களால் முடிந்த அளவில் கட்டணக் கழிவுகள் வழங்குவதே நியாயம். அதேபோல், நாட்டிலுள்ள மெக்சிஸ், டிஜி, செல்கோம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புக் கழிவுகளை வழங்க முன்வர வேண்டும். இவ்விவகாரத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிட்டு ஆஸ்ட்ரோ கட்டண தொலைக்காட்சி உட்பட மேற்குறிப்பிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நாட்டு மக்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்நேரத்தில் தாங்கள் அதிக லாபம் சம்பாதிக்க இது நேரமில்லை என்பதை மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

Categories
Featured உலகம் தலையங்கம்

கொரோனா கிருமி ஒழிய பல ஆண்டுகள் ஆகலாம்: அச்சந்தரும் புதிய ஆய்வு முடிவுகள்

உலகின் எல்லா மூலைகளையும் எட்டிவிட்ட கொரோனா கிருமித்தொற்றுப் பிரச்சினை இப்போதைக்கு ஓயாது என்றும் அது இன்னும் பல ஆண்டுகளுக்கு, ஏன் பல பத்தாண்டுகளுக்கு மனிதகுலத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளக்கூடும் என விஞ்ஞானிகள் குழு ஒன்று அச்சமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த   விஞ்ஞானிகள் அடங்கிய அந்தக் குழு, தனது ஆய்வு முடிவுகளை ‘நேச்சர் மெடிசன்’ எனும் இதழில் வெளியிட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்படுவதற்குப் பல காலத்திற்கு முன்னரே, கொரோனா கிருமி விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றி இருக்கலாம் என்பது அந்த விஞ்ஞானிகளின் கருத்து.

“படிப்படியான பரிணாம மாற்றங்கள் காரணமாக கொரோனா கிருமி  தோன்றி இருக்கலாம். பின்னர் அது ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதரைத் தொற்றுவதற்கான திறனைப் பெற்று, தீவிரமான, உயிருக்கு உலை வைக்கும் நோயாக உருவெடுத்திருக்கலாம்,” என்றார் அமெரிக்க தேசிய சுகாதார நிலையத்தின் இயக்குநர் டாக்டர் ஃபிரான்சிஸ் கொலின்ஸ்.

“கொரோனா கிருமி தொடர்பில் எங்களுக்குக் கிடைத்துள்ள மரபணு வரிசைத் தரவுகளை ஒப்புநோக்கும்போது, இந்த SARS-CoV-2 கிருமி இயற்கைச் செயல்முறைகள் மூலமாகவே தோன்றியது என நாங்கள் திட்டவட்டமாக தீர்மானிக்கிறோம்,” என்று கலிஃபோர்னியா ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிலையத்தின் தலைமை ஆய்வாளரான கிறிஸ்டியன் ஆண்டர்சன் கூறியிருக்கிறார்.

இத்தாலியில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே வித்தியாசமான ‘நிமோனியா’ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டினார் அந்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஜுசெப்பே ரெமூஸி. அதைப் பார்க்கும்போது, எவரும் அறிவதற்கு முன்னரே அது ஐரோப்பாவிற்கு வந்திருக்கலாம் என்பது அவரின் கூற்று.

அதேபோல, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு உள்ளோருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஒருவர், கடந்த ஆண்டில் புதிரானதொரு நிமோனியா பரவல் தொடர்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுகாதார நிபுணர்களும் பதிவுசெய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

“கொரோனா தொற்று குறித்த முழு விவரங்களும் ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும்,” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அந்த மருத்துவர்.

Categories
Featured தலையங்கம்

கொரோனா வைரஸ் – மிரட்டும் கொரோனா: ஒரே நாள் பலி எண்ணிக்கையில் புதிய உச்சம் தொட்ட மலேசியா

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கடந்த 24 நான்கு மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இது புதிய உச்சமாகும். இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதும் உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,470 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இதேவேளையில் கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டு, முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கையும் மலேசியாவில் அதிகரித்துள்ளது ஆறுதல் தகவல். இன்று மட்டும் 68 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதுவரை மலேசியாவில் 388 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள்

இதற்கிடையே சில புள்ளி விவரங்களையும் மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்டது. சுமார் 55.6 விழுக்காட்டினர் 60 வயதைக் கடந்தவர்கள் என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மேலும், இவர்களில் பலருக்கு நீரிழிவு, இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“மொத்தம் 67.6 விழுக்காட்டினருக்கு சிறுநீரக, இருதய நோய், நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்கள் இருந்துள்ளன. உயிரிழந்தவர்களில் 27 மற்றும் 37 வயதான ஆடவர்களும் அடங்குவர்,” என அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

“நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்காக நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சு அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதில் தனியார் அமைப்புகள் மட்டுமல்லாமல் பிற அமைச்சுகளும் உதவி வருகின்றன.

“உயர்கல்வி மையங்கள் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனைகளில் நோய்த்தொற்றை கண்டறிவதற்கான பத்து ஆய்வுக் கூடங்களை அமைக்க இரு அமைச்சுகள் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு கூடுதலாக 1,414 அதாவது மாதத்துக்கு 42,420 பரிசோதனைகளை மேற்கொள்ள இயலும்,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

91 வயது மூதாட்டி: உயிரிழந்தவர்களில் மிகவும் வயதானவர்; 27 வயது இளையரும் மரணம்

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 91 வயது மூதாட்டி பலியானார். நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களில் இவர்தான் மிக அதிக வயதுடையவர்.

கொரோனா வைரஸ்

இம்மூதாட்டிக்கும் நீரிழிவு, சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மார்ச் 26ஆம் தேதி மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அம்மூதாட்டி உயிரிழந்தார்.

இந்நிலையில், 27 வயதான இளைஞர் ஒருவரையும் கொரோனா வைரஸ் பலி கொண்டுள்ளது. மலேசியாவில் பலியான 31ஆவது நபர் இவர். மார்ச் 27ஆம் தேதி கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த இளைஞருக்கும் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய் இருந்துள்ளது.

“சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். மலேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களில் இவரே வயதில் சிறியவர். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்,” என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.

அரசு ஆணையைப் பொருட்படுத்தாத நூற்றுக்கணக்கானோர் கைது

பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு சில நாட்கள் கடந்த பிறகும் பொதுமக்களில் சுமார் 3 விழுக்காட்டினர் அதற்குக் கட்டுப்படாமல் அலட்சியத்துடன் செயல்படுவதாக மலேசிய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். சனிக்கிழமை ஒரே நாளில் 649 பேர் கைதானதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் கைதானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இவர்களில் எழுபது பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும், தாங்கள் செய்த குற்றத்தை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

“கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்னும்கூட சிலர் அரசு அணைக்குக் கட்டுப்பட மறுக்கிறார்கள். எனவே இத்தகையவர்கள் தொடர்பாக கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவு வாங்குவதன் பொருட்டு சில நிமிடங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், சிலர் இந்த வாய்ப்பையும் தவறாகப் பயன்படுத்துவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு வாங்க வேண்டும் என்று சொல்லி, ஒரே நாளில் நான்கு முறை வீட்டை விட்டு வெளியே வந்த நபர் கைதாகி உள்ளனர்.

ஆயிரம் இடங்களில் வாகனச் சோதனை; சாலையில் திரிந்த 3 லட்சம் வாகனங்கள்:

மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சாலைத் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. எனினும் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி இவற்றை எளிதில் கடந்து சென்றுவிடலாம் என சிலர் நினைப்பது தெரிய வருகிறது.

“சனிக்கிழமை மட்டும் நாடு முழுவதும் 997 இடங்களில் சாலைத் தடுப்புகள் போடப்பட்டு வாகன சோதனை நடைபெற்றது. மொத்தம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

கொரோனா வைரஸ்

“இதன் மூலம் நாட்டில் எத்தனை வாகனங்கள் சாலைகளைப் பயன்படுத்துகின்றன என்பது தெரியவருகிறது. இந்நிலை கவலை அளிக்கிறது. மேலும் 3,223 வணிக வளாகங்களிலும் போலீசார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அனுமதி இன்றி திறந்திருந்த கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

“நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் எதுவும் உண்மையல்ல,” என்றார் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி.

பொருட்கள் வாங்க ஷாப்பிங் சென்றார் மலேசிய பிரதமர்

பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்தாலும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி, போதுமான அளவு கி்டைக்கும் என்றும் மலேசிய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோலாலம்பூரில் உள்ள பேரங்காடியில் தனக்குத் தேவையான பொருட்களை வாங்கினார் மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்.

இது தொடர்பான காணொளிப் பதிவையும், புகைப்படங்களையும் அவர் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

“இன்று காலை கோலாலம்பூர் பேரங்காடிக்குச் சென்றிருந்தேன். சில பொருட்களைத் தேடிய அதே வேளையில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்றும் கவனித்தேன்.

“நல்லவேளையாக ‘சமூக விலகல்’ என்பதற்கான அவசியம் குறித்து மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். கடவுளுக்கு நன்றி. அந்தப் பேரங்காடியில் தேவையான பொருட்கள் அனைத்தும் நிறைந்திருந்தன. எனவே மக்கள் பதற்றமடையத் தேவையில்லை,” என தமது ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் மொகிதின் யாசின் குறிப்பிட்டுள்ளார்.

பேரங்காடிக்கு வந்த பிரதமரின் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்படுவது, அவர் பொருட்களைத் தேடியபடி வாடிக்கையாளர்களை நோட்டமிடுவது உள்ளிட்ட புகைப்படங்களும் அப்பதிவில் இடம்பெற்றுள்ளன.

Categories
Featured தலையங்கம்

பழம்பெரும் பத்திரிக்கையாளரான எம்.துரைராஜ் அவர்களது மறைவு தமிழர்கள் தமிழ் நல்லுலகிற்கு பேரிழப்பு… மு.வீ.மதியழகன் ஐபிஎப் உத்தாம

பழம்பெரும் பத்திரிக்கையாளரான எம்.துரைராஜ் அவர்களது மறைவு தமிழர்கள் தமிழ் நல்லுலகிற்கு பேரிழப்பு…. மு.வீ.மதியழகன் ஐபிஎப் உத்தாம

டான்ஸ்ரீ மாணிக்கா ,டத்தோஸ்ரீ துன் ச.சாமிவேலு ,டான்ஸ்ரீ எஸ். சுப்ரமணிம், டத்தோ. கு.பத்மநாபன் ,டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் போன்ற பழம்பெரும் அரசியல் ஜாம்பவான்களுக்கு அரசியல் நுணுக்கங்களை ஆய்ந்தறிந்து அரசியல் தந்த தமிழ் எழுத்தாளனும் பத்திரிகையாளரருமான ஐயா.எம்.துரைராஜ் அவர்கள்,

நல்ல தமிழ் அறிஞரும், மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அரசியல் அறிவுரரைஞரும், மூற்போக்கு சிந்தனையாளருமான தமிழர்களின் மரியாதைக்குறிய ஐயா எம்.துரைராஜ் அவர்கள்

காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்துப்போனோம், தமிழுக்கும் தமிழருக்கும் இது பேரிழப்பு. அரசாங்கத்தின் தகவல் இலாகாவில் பணியாற்றிய காலத்தில்

“உதயம்” என்ற மாத இதழ் மிக அழகான வண்ணத்து வடிவமைப்போடும், சிறந்த முறையில் 30 காசுகள் ஒரு மாத இதழை அரசாங்கம் ததுணையோடு சாதனை படைத்தவர் ஐயா.எம்.துரைராஜ். ‘உதயம்’ பத்திரிக்கையின்மூலம் எண்ணற்ற உள்நாட்டு எழுத்தாளர்களை ஊக்குவித்தவர் அவர். அதன் காரணமாகவே,

பல்லாண்டுகளாக உதயம் துரைராஜ் என்றே அழைக்கப்பட்டார். அதன் பின்னர் ‘இதயம்’ என்ற மாத இதழை சில ஆண்டுகள் நடத்தினார். பல எழுத்தாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் ஆசானாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் துரைராஜ்.

சிறந்த மேடைப் பேச்சாளருமான ஐயா.எம்.துரைராஜ் பல ஆண்டுகள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வழிநடத்தியவர். முன்னாள் மஇகா தேசியத் தலைவர் அமரர் மாணிக்கவாசகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் வாயிலாக எழுத்தாளர்களுக்கான அறவாரிய நிதி ஒன்றையும் தோற்றுவித்தவர் துரைராஜ்.

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலுவுடன் இளம் பருவத்தில் நெருங்கிய நண்பராகவும் உலா வந்தவர் துரைராஜ். அரசியலில் பிளவுகள் கண்டபோது அன்றய ம.இ.காவின் தேயத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம், உதவித் தலைவர் டத்தோ கு.பத்மநாபன் ஆகியோரோடுஇணணைந்து குரல் எழுப்பி மஇகாவின் போராட்டம் கண்டவர் ஐயா.எம்.துரைராஜ் அவர்கள், இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்ற அமரர் ஐயா.எம். துரைராஜ் அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செய்து நல்லவரொருவரை மீண்டும் இழந்துவிட்டோம் என்ற துயரத்தோடுஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

Categories
English News Featured கல்வி தலையங்கம்

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தட்டு தடுமாறி நிற்கும் வேளையில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக்…..ஆர்.கே. ரமணி கிருஷ்ணன்

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தட்டு தடுமாறி நிற்கும் வேளையில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக்…..ஆர்.கே. ரமணி கிருஷ்ணன்

நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்த 100 நாட்களுக்குள் நாட்டில் பல்வேறு மாற்றங்களையும், அரசு நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் சீர்திருத்தங்களையும், மேம்பாடுகளையும் கொண்டுவர போவதாக தேர்தலில் கொள்கை அறிக்கையில் வாக்குறுதிகளை வழங்கி, அது தற்போது தோல்வி அடைந்த நிலையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தட்டு தடுமாறி நிற்கும் வேளையில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் அதிரடியாக பள்ளி மாணவர்களின் காலணி நிற மாற்றத்தைப் பற்றி அறிவிப்பு செய்திருப்பது ஏற்புடைய செயல்தானா என்று மக்கள் சிந்தித்து கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

மலேசிய கல்வி கொள்கைகளிலும், அமலாக்கங்களிலும் அதன் அடைவு நிலைகளிலும், எவ்வளவோ குறைபாடுகளும் கோளாறுகளும் இருக்கும் வேளையில் கருப்பு காலணிக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? மலேசிய கல்வி கொள்கை இது நாள் வரை ஓர் அரசியல் தேவைகளின் அடிப்படையில் வடிவமைக்கப் படுகிறதே தவிர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் நாட்டின் தேவைகளின் அடிப்படையிலும் உலக மாறுதல்களுக்கேற்பவும் அமையவில்லை என்று வெளிப்படையான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

தமிழ்ப்பள்ளிகளை பொறுத்தமட்டில் கடந்த 30 ஆண்டுகளில் புதிய கட்டிடங்கள், புதிய பள்ளிகள், நவீன வசதிகள் என்று மேம்பாடுகள் கண்டிருந்தாலும்கூட இன்னும் தீர்க்கப்படாத மாணவர்கள் பற்றாக்குறை, கல்வி தரம், ஆசிரியர்கள் நியமனம், இடம் மாற்றம், இடைநிலை பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எதிர்காலம், மறு நிர்மாணிப்புகளில் உள்ள பலவீனங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை அடையாளம் கண்டு அமைச்சு அதனை களைய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் சமூகவியல் ஆய்வாளரும் மலேசிய முத்தமிழ்ச் சங்கத்தில் தேசிய தலைவருமான ஆர்.கே. ரமணி கிருஷ்ணன் வலியுறுத்தினார்.

 

Categories
Featured அரசியல் தலையங்கம்

குலசேகரன் மன்னிப்புக் கேட்டார்!

குலசேகரன் மன்னிப்புக் கேட்டார்!

மலாய்க்காரர்கள் வந்தேறிகள் என தாம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து மலாய் சமூகத்துக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்பதாக மனிதவளத்துறை அமைச்சர் ஜ.செ.க உதவித் தலைவர்  எம்.குலசேகரன் அறிவித்தார்.

இருப்பினும் தாம் வெளியிட்ட கருத்தை வேண்டுமென்றே அரசியல் நோக்கத்துக்காகத்  திரித்து வெளியிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியர்கள் மலாயாவில் இருந்து வருகின்றனர். இந்தியர்கள் இந்து சமயத்தை மலாயாவுக்குக் கொண்டுவந்தனர். அப்போது உள்ளூர் வாசிகளும் இந்து மதத்தைத் தழுவிய இருந்தனர். அதற்கு ஒரே சான்று, பூஜாங் பள்ளத்தாக்கு. ஆகவே வரலாற்றுப்படி இந்தியர்களை வந்தேறிகள் என்று அழைப்பது நியாயமற்றது என்றும் அவர் கூறியிருந்தார்.

ஒரு வரலாற்றுப் பதிவு இதர மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும்போது, அதன் உள்ளடக்கம் மாறுபட்டு விடும். தாம் வெளியிட்ட அந்தத் தகவல் மலாய் சமூகத்தைப் புண்படுத்தி இருந்தால், மனம் திறந்து மன்னிப்புக் கேட்பதாக அவர் கூறினார்!

 

Categories
Featured தலையங்கம் மாநிலம்

பிரிம் வேண்டாம் என்றால், அதனை வாங்காதீர்! மலேசியர்களுக்கு பிரதமர் நினைவுறுத்து

பிரிம் வேண்டாம் என்றால், அதனை வாங்காதீர்! மலேசியர்களுக்கு பிரதமர் நினைவுறுத்து

   அரசாங்கம் வழங்கி வரும் பிரிம் எனப்படும் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகை தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை
மலேசியர்கள் வாங்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று நினைவுறுத்தினார்.

40 விழுக்காட்டிற்கும் குறைவாக வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவி செய்யும் நோக்கத்திலேயே அரசாங்கம் இந்த பிரிம் திட்டத்தை தொடங்கியது.

அதாவது மாதம் 3,860 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களுக்கும், மாதம் 2 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் தனிநபர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்றார்.

அரசாங்கம் வழங்கி வரும் பிரிம் உதவித் தொகையை மக்கள் வரவேற்றுள்ளனர். அதிகமானோர் அதனைப் பெற்றுக் கொள்ள வரிசைப் பிடித்து நிற்பதிலிருந்து இது தெரிவதாகவும் அவர் சொன்னார்.

அண்மையில் தாம் சிரம்பானிலுள்ள யு.டி.சி. எனப்படும் உருமாற்ற மையத்தை திறந்து வைத்தபோது அதிகமான மக்கள் அங்கு வந்தனர். அவர்கள் யாரும் வரிசெலுத்த வரவில்லை.

மாறாக, தங்களுக்கு பிரிம் தொகை வழங்கப்படுமா, வழங்கப்படாதா என்பதை கண்டறியவே அங்கு திரண்டிருந்தனர் என்றார்.

அவர்களுக்கு பிரிம் தொகை வேண்டாம் என்றால், அவர்கள் உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்குச் சென்று தங்களின் பெயர் உள்ளதா என சரிபார்க்க மாட்டார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் அதிகமானோர் பிரிம் எனப்படும் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகையை விரும்புவதாகத் தெரிய வந்துள்ளது என்றார்.

மேலும் யாருக்கும் பிரிம் தொகை வேண்டாம் என்றால், அதனை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று தி ராக்யாட் மலேசியா எனப்படும் தேசிய முன்னணியின் அகப்பக்கத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

எண்ணெய் விலை அனைத்துலக அளவில் ஏற்றம் காண்கிறது. அதேவேளையில் இறக்கமும் காண்கிறது என்பதை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் எண்ணெய்க்கான உதவித் தொகையை மீட்டுக் கொண்டதாகவும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
எண்ணெய் விலை ஏற்றம் காண்பதையும், இறக்கம் காண்பதையும் நாம் வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

காரணம் வளர்ச்சிக் கண்ட நாடுகளில் எண்ணெய் விலை நாள்தோறும் மாற்றம் காண்கின்றன என்றார்.

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 2 வெள்ளி 50 காசுக்கு மேல் ஏற்றம் கண்டால் நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் உடனடி நடவடிக்கையில் இறங்கும் என்றும் பிரதமர் உறுதி கூறினார்.

பிரிம் தொகைக்கு 25ஆம் தேதி வரை மனு செய்யலாம் இதனிடையே, பிரிம் எனப்படும் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகைக்கு பொதுமக்கள் இம்மாதம் 25ஆம் தேதி வரை மனு செய்யலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

தொடக்கத்தில் கடந்த 27.11.2017ஆம் தேதி முதல் 31.12.2017ஆம் தேதி வரை மட்டுமே அதற்கு மனு செய்ய முடியும்.

ஆனால், அரசாங்கம் அதனை இம்மாதம் 25ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக நிதி அமைச்சருமான அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு பிரிம் தொகை பெற்றவர்களில் கணவர் அல்லது மனைவி இறந்திருந்தாலோ அல்லது தங்களின் மனு நிராகரிக்கப்பட்டிருந்தாலோ அவர்கள் புதியதாக மீண்டும் மனு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

Categories
Featured Selangor தலையங்கம் மாநிலம்

தடுப்பு காவலின் போது ஏற்படும் மரணங்கள் தொடர்கதை தானா?…ஆர்.கே.ரமணி கிருஷ்ணன்

தடுப்பு காவலின் போது ஏற்படும் மரணங்கள் தொடர்கதை தானா?…ஆர்.கே.ரமணி கிருஷ்ணன்

கடந்த 2010 முதல் 2017 வரை இந்நாட்டில் போலீஸ் தடுப்புக் காவலில் 1,654 பேர் மரணமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்திற்குள்ளான நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு அவர்களை நீதிமன்றம் கொண்டு சென்று அவர்களின் மேல் தொடுக்கப்பட்ட குற்றங்கள்  சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்ட பிறகுதான் அந்நபர்கள் மீது தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது பொதுவான நடைமுறையாகவும் அடிப்படை மனித உரிமையாகவும் இருந்து வருகின்றது.    

 சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தற்காப்பின் அடிப்படையில் சந்தேகத்திற்கு உட்பட்டவர்களின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்படுகிறது. இது சில சமயங்களில் கேள்வி குறியாகவும் மாறியுள்ளது. ஆனால் குற்றவாளி என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவர் தடுப்பு காவலில் இருக்கும் போது மரணமடைவது மலேசியாவின் காவல்துறைக்கும் மனித உரிமைக்கும் மிகப்பெரிய சவாலாகவும் அதே சமயம் மக்கள் மன்றத்தில் அவப்பெயரையும் தருகின்றது. தடுப்பு காவலில் இருக்கும் கைதிகளிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை செயல் முறைகளில் மிக மோசமான மற்றும் எதிர்மறையான செயல்பாடுகள் இருப்பதாக பொது மக்கள் சந்தேகப்படுகின்றனர் மற்றும்  அஞ்சுகின்றனர்.  

         சமீபத்தில் வட கிள்ளான் போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த கணேசஸ்வரன் (29) மரணம் சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரின் மரணத்திற்கான உண்மையான காரணம் கண்டறியப்பட வேண்டும். குற்றச் செயல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கணேஸ்வரனின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வாளர் ஆர்.கே.ரமணி கிருஷ்ணன் கூறினார்.

Categories
Featured தலையங்கம்

சீனப்புத்தாண்டிற்குப் பிறகே 14ஆவது பொதுத் தேர்தல்….டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்

சீனப்புத்தாண்டிற்குப் பிறகே 14ஆவது பொதுத் தேர்தல்….டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்

கோலாலம்பூர், நவ. 17: அடுத்தாண்டு பிப்ரவரி 16 மற்றும் 17ஆம் தேதிகளில் கொண்டாடப்படவிருக்கும் சீனப்புத்தாண்டிற்குப் பின்னரே நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தி எக்கோனோமிஸ்ட் சஞ்சியை கணித்துள்ளது.

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு அதுவே பொன்னான காலம் என்பதால் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மேற்கண்ணட காலத்தில்தான் நாட்டின் பொதுத் தேர்தலை நடத்துவார் என்றும் அது கூறியது.

1எம்.டி.பி. ஊழல் விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சிக்கியுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவர் சரியான வழியில் வெற்றிகரமான முறையில் இந்த 14ஆவது பொதுத் தேர்தலை நடத்தி தனது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் வலுப்பெற்று வரும் வேளையில், வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நாட்டின் பொதுத் தேர்தலை நடத்தி முடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரும் ஏப்ரல் மாதம் விடுதலை ஆவார் என்பதால் அதற்குள் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்துவிடும் எனவும் நம்பப்படுகிறது.

வரும் பொதுத் தேர்தல் தேசிய முன்னணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சில தில்லுமுல்லு மற்றும் ஏமாற்று வேலைகளையும் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 13ஆவது பொதுத் தேர்தல் எதிர்க்கட்சி கூட்டணி 51 விழுக்காடு வாக்குகளைப் பெற்றாலும்கூட நாட்டிலுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 40 விழுக்காடு தொகுதிகளை மட்டுமே அதனால் கைப்பற்ற முடிந்தது.

கடந்த பொதுத் தேர்தலில் சீனர்கள் மற்றும் இந்தியர்களின் வாக்குகளே எதிர்க்கட்சிக்கு பெரும் வெற்றியை கொடுத்துது என்பதால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு என்ற பெயரில் அதிகமான சீனர் – இந்தியர் வாக்குகளை திசை திருப்பும் முயற்சியிலும் தேசிய முன்னணி அரசாங்கம் இறங்கியுள்ளது.

Categories
Featured கல்வி தலையங்கம்

அதிவேக இணைய சேவை….. டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்

அதிவேக இணைய சேவை.. டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்.

கோலாலம்பூர், 01-11-2017

தேவை அதிகம் உள்ள இடங்களில் அரசாங்கம் அதிவேக இணைய சேவையை ஏற்படுத்தி தரும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதியளித்துள்ளார். குறைவான தேவை உள்ள பகுதிகளில் அத்தகைய வசதியை ஏற்படுத்தி தருவதால் பொருளாதாரத்திற்கு சாதகமான பலன்கள் இல்லை என்றாரவர்.

ஆயினும் நாட்டில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இடையில்,  இணைய வசதியை பெறுவதற்கான இடைவெளியை குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். குவலாலும்பூர் புத்ரா உலக வாணிக மையத்தில் மின்னியம் தொழில் முனைவர் திட்டத்தின் நிறைவு விழாவில் நடைபெற்ற  2050-ஆம் ஆண்டு தேசிய உருமாற்ற திட்டம் TN50 மீதான கலந்துரையாடலில் அவர் நிதியமைச்சருமான நஜிப் இதனை தெரிவித்தார்.

தேவை அதிகம் உள்ள பகுதிகளில் அதிவேக இணையச் சேவையை அரசாங்கம் ஏற்படுத்தி தருமென பிரதமர் தெரிவித்தார். அதே சமயம், நகர்  புறநகர் பகுதிகளுக்கு இடையிலான இலக்கவியல் இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

இணையம் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் பகுதிகளில், அதன் சேவையை அரசாங்கம் தொடர்ந்து தரம் உயர்த்தும் என பிரதமர் குறிப்பிட்டார். தலைநகர், புத்ரா உலக வாணிப மையத்தில், இணைய தொழில்முனைவர்களுக்கான மாநாட்டின் ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட TN50 தேசிய உருமாற்று கலந்துரையாடலில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார்.

இந்த கலந்துரையாடலை, MDEC எனப்படும் மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஏற்று நடத்தினார். தொடர்பு பல்லூடக அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாலேக் கெருவாக்  துணையமைச்சர் டத்தோ ஜைலானி ஜொஹாரி  பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஹ்மான் டலாஹான்  ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

மூன்றாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இணைய தொழில்முனைவர் திட்டத்தின் கீழ், இதுவரை நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிறு தொழில்முனைவர்களும், தொழிகல்வியை மேற்கொள்ளும் மாணவர்களும்  உருவாக்கப்பட்டுள்ளனர்.